சீமான் vs ஐபிஎஸ் அதிகாரி.. “இதெல்லாம் நல்லதுக்கு இல்லை!” டோனை மாற்றிய கார்த்தி சிதம்பரம்!
சிவகங்கை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கும் இடையே பஞ்சாயத்து தீவிரமாக வெடித்திருக்கிறது. இந்நிலையில், இவர்கள் விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருக்கும் கருத்து கவனம் பெற்றிருக்கிறது.
கார்த்தி சிதம்பரம் என்ன சொன்னார்?: காரைக்குடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பேசியிருந்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று கூறிய அவர், சீமான் vs வருண் குமார் விவகாரம் குறித்து பேசியிருந்தார்.

அதாவது “சீமானும், ஐபிஎஸ் அதிகாரியும் பொது வெளியில் கருத்து மோதலில் ஈடுபடுவது அவ்வளவு நல்லதல்ல. இதை ஊக்குவிக்க கூடாது. தலைமை செயலாளரும், டிஜிபியும் இந்த விவகாரத்தில் தலையீடு செய்து, விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
என்ன பஞ்சாயத்து?: கடந்த 2021ம் ஆண்டு திருவள்ளூவரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் பணியாற்றி வந்திருந்தார். அபோது கலவரத்தை தூண்டுதல் குற்றச்சாட்டின் பேரில் நாதகவின் முக்கிய புள்ளியான சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார். இதுதான் இப்போதைய பஞ்சாயத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. அவதூறு கருத்துக்கள் மூலம் கலவரத்தை தூண்டுவதாக வந்த குற்றச்சாட்டின் பேரில்தான் இந்த கைது நடந்ததாக காவல்துறை கூறினாலும், வேண்டும் என்றே சாட்டை துரைமுருகனை கைது செய்யப்பட்டதாக நாதகவினர் விமர்சித்தனர்.
இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் சாட்டை கைது செய்யப்பட்டார். இந்த கைதுதான் வருண் குமார் மீதான விமர்சனங்களை அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்ததாக சொல்லப்படுகிறது. அதுவரை வெறும் விமர்சனம் மட்டும் செய்து வந்தவர்கள், இரண்டாவது முறை கைதுக்கு பின்னர் அவதூறு கருத்துக்களை அள்ளி வீச தொடங்கினர். வருண் குமார், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் குறித்தும் அவதூறு பேசப்பட்டிருக்கிறது.
சீமான் vs வருண்குமார்: இது குறித்து வருண்குமார் கேள்வி எழுப்பியபோது, அவர்கள் எங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை என்கிற டோனில் சீமானிடமிருந்து பதில் வந்திருந்தது. ஆனால் அவதூறு பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டபோது, 'எங்களை பற்றியும்தான் அவதூறு பரப்பப்பட்டிருக்கிறது' என்று சீமான் பதிலளித்திருந்தார். இதற்கிடையில் சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் அது பிரிவினைவாத இயக்கம் என்றும் வருண்குமார் பேசியிருந்தார்.
சீமான் என்ன சொல்கிறார்?: கடந்த 13 ஆண்டுகளாக கட்சியை நடத்தி வரும் நாங்கள் எப்படி பிரிவினைவாத இயக்கமாக இருக்க முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “ஏறத்தாழ 36 லட்சம் வாக்ககுளை பெற்று, தமிழ்நாட்டின் மூன்றாவது தனிப்பெரும் கட்சியாக இருக்கும் எங்களை எப்படி பிரிவினைவாதி என்று சொன்னார்?. தமிழ், தமிழர்கள் என்று பேசினால் பிரிவினைவாதிகளா? தமிழர்கள் யாராவது இப்படி சொல்வார்களா?” என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிமன்றத்தில் வழக்கு: அவதூறு விவகாரம் குறித்து, சீமான் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி வருண்குமார் திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் வழக்கு தொடர்ந்துள்ளார். காவல் துறை அதிகாரியாக அல்லாமல், சாதாரண குடிமகனாகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறும் வருண்குமார், தற்போது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், அடுத்து சிவில் வழக்கை தொடர இருப்பதாகவும், எவ்வளவு வயதானாலும் வழக்கை நடத்துவேன் என்றும் கூறியுள்ளார்.
இப்படி அரசியல் தலைவருக்கும், காவல்துறை அதிகாரிக்கும் மோதல் போக்கு வெடித்துள்ள நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் கருத்து கவனிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications