மாமன்னன் படம் எஃபெக்ட்! கே.ஆர்.பெரியகருப்பன் Vs தமிழரசி! பனிப்போருக்கு தற்காலிக முற்றுப்புள்ளி!
சிவகங்கை: அமைச்சர் பெரியகருப்பனும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசியும் சிவகங்கை மாவட்டத்தில் எப்போதுமே எதிரும் புதிருமாகவே அரசியல் செய்து வந்த நிலையில் இப்போது ஒன்றாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட திமுக செயலாளராகவும், அமைச்சராகவும் இருப்பவர் கே.ஆர்.பெரியகருப்பன். இந்த மாவட்டத்திற்குட்பட்ட மானாமதுரை தனி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் தமிழரசி. இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் பனிப்போரால் அரசு அலுவலர்கள் யார் பேச்சைக் கேட்பது எனத் தெரியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில் மாமன்னன் திரைப்படத்தின் எஃபெக்ட்காக, தனித் தொகுதி எம்.எல்.ஏ.வான தமிழரசியின் குரலுக்கும் இப்போது உரிய மதிப்பு தரப்படுகிறதாம். அரசு நிகழ்ச்சிகளுக்கு தனக்கு முறைப்படி அழைப்பு விடுப்பதில்லை, அமைச்சர் தரப்பு தன்னை தொடர்ந்து புறக்கணிக்கிறது என தமிழரசி எம்.எல்.ஏ. ஒரு காலத்தில் புலம்பி வந்த நிலையில், இப்போது அவருக்கு முறைப்படி தகவல்கள் சொல்லப்பட்டு அரசு விழாக்களுக்கான அழைப்பிதழும் கொடுக்கப்படுகிறதாம்.
உட்கட்சி பூசல் காரணமாக தமிழரசிக்கு எதிராக அரசியல் செய்து அது வேறு கோணத்தில் சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதில் அமைச்சர் பெரியகருப்பன் தரப்பு உறுதியாக உள்ளதாம். அதனால் தான் இருவருக்கும் இடையேயான பனிப்போருக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். இதனால் தான் அவர்கள் இருவரையும் அரசு விழாக்களில் ஒன்றாக பார்க்க முடிகிறதாம்.
தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தமிழரசி அதற்கான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, கயல்விழி மாற்றப்படுவார் என ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில் தனக்குத் தான் அந்த இலாகா தரப்படும் என நம்பிக்கையுடன் இருந்தார் தமிழரசி.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சிவகங்கையில் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆசிரியம் கல்வெட்டு கண்டெடுப்பு! வியந்து பார்த்த மக்கள்












Click it and Unblock the Notifications