Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலப்பத்திரம் தராமல்.. பேரம் பேசி இழுத்தடித்த காரைக்குடி சார் பதிவாளர்.. இது சிவகங்கையின் அசிங்கம்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: பதிவு செய்த பத்திரம் தருவதற்கு லஞ்சம் கேட்டுள்ளார் காரைக்குடி சார் பதிவாளர்.. இது தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுவிட்டாலும், இந்த லஞ்ச பணத்துக்காக பேரம் பேசிய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்து, அதிர்ச்சியை தந்து வருகிறது.

தமிழகத்தில் போலியான பத்திரத்தை தயார் செய்து, அதன்மூலம் பத்திரப்பதிவதில் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இவைகளை களைவதற்கான முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனினும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை.

registration department sivaganga

அதிகாரிகள் கைது: உயர் அதிகாரிகளும், பெண் அதிகாரிகளும் என பாரபட்சமின்றி கைதாகி கொண்டிருக்கிறார்கள்.. லஞ்சம் வாங்கி, கையும் களவுமாக சிக்கி, அம்பலப்பட்டாலும்கூட, அடுத்தடுத்த அதிகாரிகளின் கைது நடவடிக்கைகள் நடந்து கொண்டேயிருக்கின்றன.

2 நாட்களுக்கு முன்பு, காரைக்குடி தாசில்தார் கைதான அதிர்ச்சி இன்னமும் அடங்கவில்லை.. இந்த தாசில்தார் கைது செய்யப்பட்டுவிட்டாலும், அவர் எப்படி சிக்கினார் என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

காரைக்குடியைச் சேர்ந்த வைரவேல் என்பவர், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்திருக்கிறார்.. இதற்கான பத்திரப்பதிவு காரைக்குடி சார்-பதிவாளர் அலுவலகம் எண்-2-ல் நடைபெற்றது. ஆனால், பத்திரப்பதிவு முடிந்து பல நாட்கள் ஆகியும் பத்திரம் வழங்கப்படவில்லை.

சார் பதிவாளர்: இதுகுறித்து, ஆவண எழுத்தர் புவனப்பிரியாவை அணுகி கேட்டதற்கு, பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளருக்கு கொடுக்க ரூ.20 ஆயிரம் வேண்டும் என்றாராம். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த வைரவேல், லஞ்சம் தர மறுப்பு தெரிவித்தார். இதனால், பத்திரத்தை தயார் செய்யாமல் புவனப்பிரியா இழுத்தடித்துள்ளார்.. எனவே, கடந்த 12ம் தேதி வைரவேல் மீண்டும் புவனப்பிரியாவை சந்தித்து பத்திரப்பதிவு ஆவணம் குறித்து கேட்டதற்கு, சார் பதிவாளர் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புவனப்பிரியா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அலுவலகம் சென்று, சார் பதிவாளர் முத்துப்பாண்டியை நேரிலேயே சந்தித்த வைரவேல், பத்திரப்பதிவு குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது பத்திரப்பதிவு ஆவணம் தொடர்பாக முத்துப்பாண்டி கூறிய சில தகவல்களுக்கு வைரவேல் விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து புவனப்பிரியா சொல்வது போல் செய்யும்படியும், மறுநாள் பத்திரம் பதியலாம் என்றும் சொல்லி வைரவேலை சார்பதிவாளர் அனுப்பி வைத்திருக்கிறார்.

பத்திரப்பதிவு: மறுநாள் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்ற வைரவேலை சந்தித்த புவனப்பிரியா, பத்திரப்பதிவுக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் வேண்டும் என முத்துப்பாண்டி கேட்பதாக கூறியுள்ளார்.

அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று வைரவேல் சொல்லவும், பத்திரத்தை பதிவு செய்த முத்துப்பாண்டி அதனை ரிலீஸ் செய்யவில்லை. மறுநாள் பத்திரத்தை கேட்ட போது லஞ்சம் தராததால் ஆவணத்தை நிலுவையில் வைத்துள்ளதாகவும், பணத்தை கொடுத்தால் மட்டுமே ஆவணத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றும் கறாராக கூறியிருக்கிறார்.

ஆவணம்: தன்னால் ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்க முடியாது. பணத்தை குறைத்து கொள்ளும்படி வைரவேல் கூறியிருக்கிறார்.. இதனையடுத்து ரூ.60 ஆயிரத்தை புவனப்பிரியாவிடம் கொடுத்துவிட்டு ஆவணத்தை பெற்றுக் கொள்ளும்படி கூறியுள்ளார். புவனப்பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டுகேட்டபோது, பணத்தை கொடுத்தால் ஆவணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றாராம்.

இதையடுதது, லஞ்சம் கொடுக்க விரும்பாத வைரவேல், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தரவும், அவர்களது அறிவுரைப்படி, பத்திரப்பதிவு அலுவலகம் சென்று முத்துப்பாண்டியிடம் ரசாயனம் தடவிய ரூ.60 ஆயிரம் லஞ்சப்பணத்தை தந்துள்ளார்.. அப்போது அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முத்துப்பாண்டியையும், அவருக்கு உதவியாக இருந்த புவனப்பிரயாவையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அதிர்ச்சி பேரம்: பதிவு செய்த பத்திரத்தை தருவதற்கு 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதும், பிறகு அதை 60 ஆயிரம் ரூபாயாக குறைத்ததும், தற்போது வெளிச்சத்துக்கு வந்து, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+