Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹவுஸ் ஓனர் கொடுத்த ஓயாத தொல்லை.. 3 குழந்தைகளுடன்.. விஷம் குடித்த பிரியா.. தேவகோட்டை பரிதாபம்!

ஹவுஸ் ஓனர் தந்த தொல்லையால் பெண் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: ஹவுஸ் ஓனர் ஓயாமல் கொடுத்த தொல்லையால் பிரியா விஷம் குடித்து விட்டு இறந்தே விட்டார்.. இறந்தவர் தன்னுடைய 3 குழந்தைகளுக்கும் அதே விஷத்தை தந்துவிட்டார்.. அந்த குழந்தைகள் உயிருக்கு போராடி வருகின்றன.. இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ்... இவர் 4 மாசத்துக்கு முன்பு மாரடைப்பால் இறந்துவிட்டார்.. இவரது மனைவி பிரியா.. 36 வயதாகிறது.. பர்வதவர்த்தினி 16, நீலகண்டன் 15, ஜெய்ஹரிகிருஷ்ணன் 11 ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

 lockdown crime: woman committed suicid near Devakottai

இறந்துபோன ராமதாசின் பெரியம்மா வசந்தி என்பவர் வீட்டில்தான் இவர்கள் குடியிருந்தனர்.. ஆனால் ராமதாஸ் இறந்துவிடவும், பிரியாவை காலி செய்ய ஹவுஸ் ஓனர் சொல்லி உள்ளார்.. குழந்தைகளை வைத்து கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் பிரியா விழி பிதுங்கி தவித்துள்ளார். இதில்தான் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்தது.

இதனிடையே, வசந்தியின் தம்பியும், பிரியாவிடம் தகராறு செய்து அவரை தாக்க முயன்றதாகவும் தெரியவருகிறது... இதனால் மனவருத்தம் அடைந்த பிரியா, 3 பிள்ளைகளுக்கும் காபியில் எலி மருந்தை கலந்து கொடுத்தார்.. அம்மா காபி தருகிறார் என நினைத்து 3 பேருமே அதை வாங்கி குடித்துவிட்டனர்.. பிறகு அந்த காபியை பிரியாவும் குடித்துவிட்டார்.. 4 பேருமே ஒரே வீட்டில் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இவர்கள் உயிருக்கு போராடியதை அறிந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அனைவரையும் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.. ஆனால் பிரியா இறந்துவிட்டார்.. 3 குழந்தைகளுக்கும் தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இப்போதுமே 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. தேவகோட்டை நகர் போலீசார் இதை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+