சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கிரஸும் பாஜகவும்! தலை தூக்கினால் தட்டி அமுக்குவோம்! சிவகங்கையில் சீறிய பெரியகருப்பன்! என்னாச்சு?

Google Oneindia Tamil News

சிவகங்கை : இந்தி திணிப்பு என்ற ஆயுதத்தை மத்தியில் ஆளுகின்றவர்கள் செய்கிறார்கள். காங்கிரஸ் ஆக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் இந்தி திணிப்பை எதிர்த்து குரல் கொடுக்க என்றுமே திமுக தயங்கியதில்லை என அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இந்தி எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இந்தி எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழக அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் கலந்து கொண்டார். மேலும் நகர ஒன்றிய அளவிலான நிர்வாகிகள், நூற்றுக்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பழையபடி.. 15 மாசம் ஜெயில்ல வைங்க.. இந்தி கற்றுக்கொள்கிறேன்.. ஆ.ராசா கலாய் பழையபடி.. 15 மாசம் ஜெயில்ல வைங்க.. இந்தி கற்றுக்கொள்கிறேன்.. ஆ.ராசா கலாய்

கேஆர் பெரியகருப்பன்

கேஆர் பெரியகருப்பன்

நிகழ்ச்சியில் பேசிய கேஆர் பெரியகருப்பன் ," இந்தி திணிப்பு என்ற ஆயுதத்தை மத்தியில் ஆளுகின்றவர்கள் செய்கிறார்கள். காங்கிரஸ் ஆக இருந்தாலும் பாஜகவாக இருந்தாலும் யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்கள் அந்த நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். அதற்கு தயங்குவதில்லை. அவர்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்த்து குரல் கொடுக்க என்றுமே திமுக தயங்கியதில்லை. பின்வாங்கியதில்லை.

திராவிட இயக்கங்கள்

திராவிட இயக்கங்கள்

இதனை வரலாறு சொல்கிறது. இந்த உணர்வு நாள் தான் தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் ஆட்சி இன்று வரை நடக்கிறது என்றால் இது வரலாறு இல்லையா. தமிழுக்கு இணையான மொழி உலகில் எதுவுமில்லை. தமிழர்களின் நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் இவையும் உலக அளவில் சிறந்து விளங்க கூடியது அதற்கு ஈடானது எதுவும் இல்லை. உலகில் தாய்மொழிக்காக உயிரை நீத்தோர்கள் தமிழுக்காக தான் என்று சொல்லலாம்.

கருணாநிதி

கருணாநிதி

இந்தி திணிப்பு என்பது எப்போதெல்லாம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் அவை தட்டி அமுக்கின்ற வேலையை திமுக அன்று தொட்டு இன்று வரை செய்து வருகிறது. நேரு காலத்திலும் சரி இந்திரா காந்தி காலத்திலும் சரி பேரறிஞர் அண்ணா இந்தி திணிப்பை எதிர்த்து அரசியல் செய்த வந்தார். தமிழக முதல்வராக இருந்த தமிழ் இன தலைவர் கலைஞர் இந்தி மொழியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி தமிழ் தாய்மொழியான தமிழையும் காத்து உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இப்படி ஒரு சூழ்நிலையை மீண்டும் ஒன்றிய அரசு இந்தி திணிப்பு என்பதன் மூலம் மிரட்டி வருகிறது. அண்ணா கலைஞர் வழி வந்த தலைவர் இன்றைய முதல்வர் இந்த மிரட்டல்ளுக்கு அஞ்ச மாட்டேன் எனவும், பலர் உயிரை தந்து தியாகம் செய்ததமிழ் மொழியை காத்திட சபதம் எடுத்து அதற்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார் இன்றைய முதல்வர்" என பேசினார்.

English summary
The weapon of Hindi imposition is done by those who rule in the middle. Whether it is Congress or BJP, DMK has never hesitated to raise its voice against the imposition of Hindi, Minister Periyakaruppan said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X