சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டரை அன்னார்ந்து பார்த்து கும்பிட்டவர்கள் இன்று அதிலேயே பயணிக்கிறார்கள்- ஸ்டாலின் விமர்சனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஹெலிகாப்டரை பார்த்து கும்பிட்டவர்கள் இன்று அதிலேயே பயணிக்கிறார்கள்- ஸ்டாலின்-வீடியோ

    சிவகங்கை: ஹெலிகாப்டரை அன்னார்ந்து பார்த்து கும்பிட்டவர்கள் இன்று அதே ஹெலிகாப்டரில் கஜா புயலை பார்வையிடுகிறார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழடி கிராமத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய முக ஸ்டாலின்,
    தமிழகத்திற்கு பெருமையும், சிறப்பும் கிடைத்துவிடும் என நினைத்து கீழடி அகலாய்வு ஆராய்ச்சி அதிகாரியை மாற்றி ஆராய்சியை சரிவர செய்ய விடாமல் தடுத்தது மத்திய அரசு.

    தேர்தலை முன்வைத்து தமிழகத்திற்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாதவர் மோடி. கிராமம்தான் கோவில் என்ற காந்தியின் கருத்திற்கு ஏற்ப நான் கிராமத்திற்கு வந்துள்ளேன். தமிழகத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்லும் கீழடி ஊராட்சிக்கு வந்துள்ளேன். 18 சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டு 18 சட்டமன்ற தொகுதி அனாதையாக உள்ளது. தற்பொழுது காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகள் சேர்த்து நாடாளுமன்ற தேர்தல் வரும் என நம்பிக்கையுள்ளது.

    "நான் தாத்தா இல்லம்மா.. மாமா".. கிராம சபை கூட்டத்தில் சிறுமியை கலாய்த்த மு.க.ஸ்டாலின்

    கீழடி

    கீழடி

    தமிழகத்தில் 21 தொகுதிகள் மட்டுமல்லாமல் 234 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றால் தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும்.இந்தியா அளவில் அல்லாமல் உலக அளவில் உள்ள எந்த கட்சியும் தி.மு.க போன்று கிராம மக்களை சந்தித்ததே கிடையாது. தேசிய அளவில் உள்ள கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தன்னிடம் தங்களால் எப்படி கிராமசபை நடத்த முடிகிறது என வியப்புடன் கேட்கின்றனர்.எந்த கட்சிக்கும் இல்லாத கட்டமைப்பு தி.மு.கவில் மட்டுமே உள்ளது.வரலாற்று சிறப்பு வாய்ந்த கீழடிக்கு வந்து நிற்பதை நான் பெருமையாக நினைக்கிறேன்.

    ஆராய்ச்சி

    ஆராய்ச்சி

    ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி பகுதியில் தமிழின மக்கள் வாழ்ந்த தடயம் உள்ளது. கீழடியில் அகலாய்வு ஆராய்ச்சி பணியை சிறப்பாக நடைபெற்ற நிலையில் மத்திய அரசு திடீரென அதிகாரியை மாற்றியது.தமிழகத்திற்கு பெருமையும், சிறப்பும் கிடைத்துவிடும் என நினைத்து கீழடி அகலாய்வு ஆராய்ச்சி அதிகாரியை மாற்றி ஆராய்ச்சியை சரிவர செய்ய விடாமல் தடுத்தது மத்திய அரசு. வரலாற்றை மறைக்கும் செயலை செய்கிறது மத்திய அரசு.

    ஹெலிகாப்டர்

    ஹெலிகாப்டர்

    கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட போது பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் ஒருமுறை கூட மக்களை வந்து பார்க்கவில்லை. அதேபோல் ஒரு காலத்தில் ஹெலிகாப்டரை கீழிருந்து பார்த்து கும்பிட்ட முதல்வர் கஜா புயலை ஹெலிகாப்டரில் இருந்தபடி பாதிக்கப்பட்ட மக்களை முறையாக கூட பார்க்காமல் சென்று விட்டார். பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை தற்பொழுது நிறைவேற்ற முடியவில்லை என்றாலும் ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை பட்டியலினத்தவர் பட்டியலில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சி தேர்தல்

    ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதியான கல்விக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த வாக்குறுதியை வழங்க உள்ளோம்.தமிழகத்தில் தற்போது மெஜாரிட்டி இல்லாத மைனாரிட்டி அரசு ஊசலாடி வருகிறது.எம்.எல்.ஏக்களை தக்க வைக்க வேண்டி அவர்களுக்கு கமிஷன் கொடுத்து அவர்களை தக்க வைத்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருந்தால் பொதுமக்கள் முன்வைக்கப்படும் 50 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கும்.

    நாடகம் நடத்தும் மோடி

    நாடகம் நடத்தும் மோடி

    திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் சேவையாற்றுவோம்.மத்திய அரசு விவசாயிகளுக்கான ஆண்டிற்கு 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கும் அறிவிப்பு நம்மிடமிருந்து பணத்தை திருடி நமக்கே வழங்கும் திருட்டுத்தனம்.இந்த அறிவிப்பு சாதனையள்ள திருட்டுத்தனம். மத்தியில் மோடி நாடகத்தை நடத்தி வருகிறார்.

    சுகாதாரத் துறை

    சுகாதாரத் துறை

    கேவலமான முறையில் தமிழக முதல்வர் நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் விபத்தின் அடிப்படையில் பழனிச்சாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் முறையாக அறிவிக்காதது ஏன் என கேள்வி?கடந்த காலங்களில் முதல்வராக இருப்பவர்கள் சிகிச்சை பெறும் போது அவர்களின் சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை மூலமாக முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஆட்சி

    ஆட்சி

    ஜெயலலிதாவால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அ.தி.மு.கவினர் இதுவரை ஜெயலலிதாவிற்கு புகழ் அஞ்சலி கூட்டம் நடத்தப்படவில்லை. ஊழல் செய்து விட்டு ஜெயிலுக்கு சென்றவர் ஜெயலலிதா, கொலை செய்து விட்டு முதல்வராக உள்ளவர் எடப்பாடி பழனிச்சாமி. ஊழல் ஆட்சியாக மட்டுமல்லாமல் கொலை செய்யும் ஆட்சியாகவும் உள்ளது என்று ஸ்டாலின் உரையாற்றினார்.

    English summary
    DMK President MK Stalin criticises ADMK that they saluted Helicopter where Jayalalitha travelled. Now they are reviewing Gaja affected places in that Helicopter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X