'ஆவேச நடனம்..' முள் படுக்கையில் அமர்ந்து.. அருள்வாக்கு கூறும் நாகராணி அம்மையார்!!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நாகராணி அம்மையார் முள் படுக்கையில் அமர்ந்து அருள்வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது.
Recommended Video
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல் கிராமம். இங்கு அருள்மிகு பூங்காவனம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது
இந்த திருக்கோவிலில் 45ஆவது மண்டல பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் அம்மையார் நாகராணி முள் படுக்கையின் மீது சாமியாடி அருள்வாக்கு கூறுவது முக்கிய நிகழ்ச்சியாகும்.

அதேபோல் இந்த வருடம் கார்த்திகை 1 முதல் நாற்பத்தி எட்டு நாட்கள் விரதமிருந்து, பின்னர் உடைமுள். இலந்தை முள். இலைக்கற்றாழை முள் மற்றும் பல வகை முட்களின் மேல் அமர்ந்து வரும் பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்து காட்சி தந்தார் நாகராணி அம்மையார்.
இந்த நிகழ்ச்சியில் லாடனேந்தல் கிராமம் மற்றும் திருப்புவனம் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல் மானாமதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர். அப்போது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
உடைமுள். இலந்தை முள். இலைக்கற்றாழை முள் உள்ளிட்டவற்றைக் கொண்டு பெரியளவில் முள் படுக்கை அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஆவேசமாகச் சாமியாடுகிறார் நாகராணி அம்மையார். அதன் பின்னர் அங்கு வரும் பக்தர்களுக்கு நாகராணி அம்மையார் அருள்வாக்கு அளிக்கிறார்.

-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications