Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அஜித் குமாரின் வாயில் கம்பை நுழைத்து! குடலில் ஊடுருவி! நடுங்க வைக்கும் பிரேத பரிசோதனை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கில் வெளியான பிரேத பரிசோதனை முடிவுகளில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. தலையில் ராடால் ஓங்கி அடித்ததால் ஏற்பட்ட மூளை ரத்தக் கசிவே அஜித்தின் மரணத்திற்கு காரணம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித் குமாரின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் "அவருடைய உடலில் வெளிப்படையாகத் தெரிந்த 44 சிராய்ப்பு காயங்கள் இருந்துள்ளன. வயிற்றின் நடுவே கம்பியால் குத்தப்பட்ட காயமும், ரத்தக்கட்டுக் காயங்களும் இருந்தன. தலையில் கம்பியால் தாக்கியதால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, இதுவே மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடைய உடலில் சிகரெட்டால் சூடு வைத்த காயங்கள் இருந்தன.

ajith kumar thirupuvanam sivagangai

அது போல் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால் ரத்தக் காயம் பல வகையாக ஏற்பட்டுள்ளது. மேலும் அவரை தரையில் இழுத்துச் சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது போலீஸார் அடியில் இருந்து தற்காத்துக் கொள்ள போராடிய போதும் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.

பல மணி நேரம் கும்பலாக சேர்ந்து இந்த சித்ரவதையை நடத்தி இருக்கலாம் என பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது.

மேலும் இந்த அறிக்கையில் ரத்தக் கட்டு என்பது உடலில் உள்ள சதையை கடுமையாக அடித்ததால் ஏற்படும் நீல அல்லது கருப்பு நிற காயம். இந்த தாக்குதலின் இடத்தில் நரம்பு நசைப்பு, சதை அடிதடி போன்று காயத்தை விளக்குகிறது.

அது போல் வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயம் உள்ளது. இது மிகவும் ஆபத்தான காயம், வாயிற்குள் அல்லது குடல் பகுதிக்குள் ஊடுருவியிருக்க வாய்ப்பு உள்ளது. இத்தகைய காயம் உயிருக்கு ஆபத்து தரக் கூடியதாக இருக்கலாம். தலை கபாலத்தில் அடியும் உள்ளே மூளையில் ரத்தக் கசிவும் உள்ளது என 8 வகையான விஷயங்கள் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றியவர்தான் அஜித் குமார் (27). இந்த நிலையில் நகைத் திருட்டு வழக்கு தொடர்பாக அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவரை கடுமையாக தாக்கியதாக சொல்லப்படுகிறது.

இதனால் மயங்கி விழுந்த அஜித் குமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோவில் ஏற்றும்போதே அவருக்கு நாடித் துடிப்பே இல்லை என அஜித்தின் நண்பர்கள் தெரிவித்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த லாக் அப் டெத் குறித்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சம்பவத்தில் தனிப்படை போலீஸார்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் போலீஸாருக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+