பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி ஏற்பாடுகள் தீவிரம்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் திருமகனார் என அழைக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவானது அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள்.

முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் கூட்டம் என இரண்டு நாட்களும் பசும்பொன் கிராமமே களை கட்டி காணப்படும். திமுகவாக இருந்தாலும் சரி அதிமுகவாக இருந்தாலும் சரி அந்த கட்சியின் பிரதான தலைவர்கள் அனைவரும் நிச்சயம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள். தற்போது முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கும் நிலையில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் அங்கு வந்திருக்கிறார்.
இதேபோல தமிழக அமைச்சர்கள், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சசிகலா, டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். அஞ்சலி நிகழ்ச்சி என்பதை தாண்டி அப்பகுதி மக்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கடவுள் போலவே பார்க்கின்றனர். விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து வந்து அவரை தரிசிப்பதும் வழக்கம்.
அந்த வகையில் வருகின்ற 30ஆம் தேதி தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காளையார் கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
இதே போல ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே அதிமுக சார்பில் தேவர் குருபூஜைக்கு 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசம் பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அப்போதைய மதிப்பில் சுமார் மூன்று கோடி ரூபாய்க்கு 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை வழங்கினார். குருபூஜை விழாவின் போது மட்டும் தேவருக்கு அணிவிக்கப்படும் இந்த கவசம் மற்ற நாட்களில் மதுரையில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் வைக்கப்படும்.
வருடந்தோறும் அதிமுக பொருளாளர், தேவர் ஜெயந்தி விழாவுக்காக இந்த கவசத்தை பெற்று விழா குழுவினரிடம் ஒப்படைப்பார்கள். கடந்த ஆண்டுகளில் அதிமுக பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தேவர் குருபூஜை விழா குழுவுக்கு தங்க கவசத்தை வழங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக இருக்கும் நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்தை பெற்று விழா குழுவினரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications