உரிமைத்தொகை ரூ.1,000 ஆண்களுக்கும் வரப்போகிறதா? தமிழக அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்.. எப்போ? செம சர்ப்ரைஸ்
சிவகங்கை: மகளிர் உரிமை திட்டம் பெண்களின் அமோக ஆதரவை பெற்றுவரும் நிலையில், மற்றொரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அது என்ன?
பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனில் தமிழக அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. காலை உணவுத்திட்டம், உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்துமே மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருந்து வருகிறது.

மகளிர் திட்டம்: குறிப்பாக, கல்லூரிகளில் சேரும் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் 3 லட்சம் மகளிருக்கு மேல் பயன்பெற்று கொண்டிருக்கிறார்கள்.. கடந்த நிதியாண்டில் மட்டும் 2,09,365 மாணவியர்களும், 2023-2024-ஆம் நிதியாண்டில் சுமார் 64,231 மாணவிகளும் கூடுதலாக இணைந்து 2,73,596 மாணவியர்களும் பயனடைந்துள்ளனர்.
அந்தவரிசையில் தற்போது அறிமுகமாகியிருக்கும் திட்டம்தான், "தமிழ்ப்புதல்வன்" திட்டமாகும்.. பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்திட, அவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.. இந்த திட்டத்திற்காக 360 கோடி ரூபாயை இந்த ஆண்டிற்கு அனுமதித்துள்ள நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை நேற்றைய தினம் கோவை அரசு கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின், தொடங்கி வைத்துள்ளார்.
விமர்சனம்: இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்தினை கூறி, விமர்சித்து வருகின்றன.. ஏற்கனவே மகளிர் உரிமைத்தொகை குறித்தும், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.. மகளிர் அனைவருக்கும் 1000 ரூபாய் தருவோம் என்று சொல்லிவிட்டு, "தகுதி வாய்ந்த" பெண்களுக்கு மட்டும் வழங்குவது ஏன்? "தகுதி" என்று எதை வைத்து மதிப்பிடுகிறீர்கள்? என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.. அத்துடன் அனைத்து மகளிருக்குமே 1000 ரூபாய் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் வருகிறார்கள்.
அதேசமயம், இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டமானது, பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.. தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும், திமுகவின் அபார வெற்றிக்கு முக்கிய காரணியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பெரியகருப்பன்: இந்நேரத்தில் இன்னொரு மகிழ்ச்சி தகவலை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர், "தமிழ்நாட்டில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்த தொகை சென்று சேரும் என்பதால் விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்யவும் தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது" என்றார். அப்போது செய்தியாளர்கள், "பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்குவது போன்று ஆண்களுக்கும் வழங்கப்படுமா" என்று கேட்டார்கள்..
மகிழ்ச்சி: அதற்கு அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், "திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகையினை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த உரிமைத் தொகை தங்களுக்கு இல்லையே என்ற ஆண்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் வரும்" என்றார்.. இந்த தகவல் மிகுந்த மகிழ்ச்சியை தந்துகொண்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications