சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்ஜெட் பாராட்டுக்குரியது.. கடன் சுமை மிக மிக குறையும் என நம்பிக்கை .. பாராட்டி தள்ளிய ப.சிதம்பரம்.!

Google Oneindia Tamil News

சிவகங்கை : தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது என்றும் சுகாதாரம், கல்விக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது, ஆரோக்கியமானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , மத்திய முன்னாள்நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றன.

காலை 10 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் வாசிப்பு 1.50 மணிநேரம் வரை நீண்டது. இந்த பட்ஜெட்டுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுதான் தமிழ்நாடு.. ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக போராட்டம்.. முருகர் காவடிக்கு வழிவிட்ட இஸ்லாமியர்கள்! இதுதான் தமிழ்நாடு.. ஹிஜாப் தீர்ப்புக்கு எதிராக போராட்டம்.. முருகர் காவடிக்கு வழிவிட்ட இஸ்லாமியர்கள்!

தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்

அதே நேரத்தில் பட்ஜெட்டில் மகளிருக்கு மாதந்திர உதவித் தொகை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இல்லையென அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்புக்குரியது என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

பலரும் பாராட்டு

பலரும் பாராட்டு

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது என்றும் சுகாதாரம், கல்விக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது, ஆரோக்கியமானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , மத்திய முன்னாள்நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் வரவேற்பு

ப.சிதம்பரம் வரவேற்பு

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், "சுகாதாரம், கல்விக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது, ஆரோக்கியமானது. பெண்களின் கல்வி இடை நிற்றலை போக்கும் விதமாக பட்ஜெட்டில் அரசு பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என கூறியுள்ளார்.

தொலைநோக்கு சிந்தனை

தொலைநோக்கு சிந்தனை

மேலும் இந்த பட்ஜெட்டின் மூலம் மத்திய அரசின் கடன் சுமையை விட அடுத்த ஆண்டில் தமிழகத்தின் கடன் சுமை மிக, மிக குறையும் என நம்பிக்கை எழுந்துள்ளது" என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசின் இந்த பட்ஜெட் ஆனது தொலைநோக்கு சிந்தனையுடன் இருப்பதாகவும் மாநிலத்தில் வளர்ச்சிக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Senior Congress leader and former Union Finance Minister P. Chidambaram has said that the Tamil Nadu government's budget is commendable and that allocating more funds for health and education is welcome and healthy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X