சிவகங்கையில் 50 சவரன் தங்க நகை.. திகைத்த திருவாரூர் தீபா.. கூட்டுறவு சங்க பேங்க்கில் என்ன நடக்குது?
சிவகங்கை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், தங்கத்தில் போலி நகைகளை உருவாக்குவதும், தொடர்ந்து நடந்து வருகிறது.. ஒரிஜினல் போலவே, போலி தங்கத்தையும் மோசடிபேர்வழிகள் தயார் செய்வதால், எது அசல்? எது போலி? என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லையாம்.. அந்த அளவிற்கு கச்சிதமாக போலியை தயாரிக்கிறார்கள் மோசடிப்பேர்வழிகள். இந்த போலி நகைகளை, தங்க நகைகளாக மாற்றி வைத்து, மற்றொரு மோசடியிலும் இறங்கிவிட்டார்கள்.. அப்படித்தான் சிவகங்கையிலும், திருவாரூரிலும் சம்பவங்கள் நடந்துள்ளன.
காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமீபத்தில் நடந்தது.. காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி, கம்மவார் பாளையம் இந்தியன் வங்கி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இந்தியன் வங்கி ஆகிய 3 வங்கி கிளைகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.

தங்க நகைகள்
இந்த 3 வங்கி கிளைகளிலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் அத்தனையும் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா நகைகளுக்கும் தங்க முலாம் பூசி அடமானம் வைத்திருப்பதும் ஆய்வில் உறுதியானது..
அதுபோலவே, சிவகங்கை மாவட்டத்திலும் தகிடுதத்தம் வேலை நடந்துள்ளது.. எஸ்.புதூர் அருகே நாகமங்கலம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில், இணை பதிவாளர் தலைமையில் கூட்டுறவு அதிகாரிகள், சங்க லாக்கரில் உள்ள நகைகளை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்..
அப்போது 13 பாக்கெட்களில் இருந்த 50 சவரன் நகைகள் போலி என்பதும், இந்த போலி நகைகளை அடமானமாக வைத்து, 18.67 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்றதும் தெரியவந்தது. இதையடுதது, கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இணை பதிவாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
இதுதான் காரணமா
சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை, பல வங்கிகளில் 10 வருடத்துக்கும் மேலாக ஒரே செயலாளர்கள் பணிபுரிந்து வருவதால்தான், இப்படியான முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.. எனவே, மாவட்ட அளவில் அனைத்து தொடக்க கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் உள்ள நகைகளையும் பரிசோதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிளம்பியிருக்கிறது.
கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனின் சொந்த மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்திலேயே இப்படியொரு மோசடியா? என்று பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தீபா நகைகள் எங்கே
நேற்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திலும் இதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே வேப்பஞ்சேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், ஐயப்பன் என்பவரின் மனைவி தீபா, அடகு வைத்த தனது 6 பவுன் மதிப்பிலான தங்க நகையை மீட்பதற்காக சென்றிருக்கிறார்.. ஆனால், அவரது நகை அங்கு இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த தீபா, "என்னுடைய நகையை எங்கே வைத்துள்ளீர்கள்?" என்று கேட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுதது, கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் பிரபா, நேரடியாகவே நகைகள் தொடர்பாக ஆய்வு செய்தார்... அப்போதுதான் தீபா நகை மட்டுமல்லாமல், மற்ற விவசாயிகளின் நகைகளும் மாயமாகியிருப்பது தெரியவந்தது.
சஸ்பெண்ட் உத்தரவு
விவசாயிகளிடமிருந்து அடகு பிடிக்கப்பட்ட வகையில் சுமார் 498 சவரன் தங்க நகைகள் இருக்க வேண்டும். ஆனால், அந்த நகைகள் வங்கி ஊழியர்களால் வேறு எங்கோ எடுத்துச்செல்லப்பட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளதை அவர் கண்டறிந்தார். இதன் மதிப்பு ரூ.1.31 கோடி ஆகும்... இந்த முறைகேடு தொடர்பாக வங்கி ஊழியர் முருகானந்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதுடன், மாயமான நகைகள் குறித்த விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications