மதுரையில் பாஜக பிரபலத்தை நிர்வாணமாக நிற்க வைத்து.. "நான் ஒரு பொம்பள பொறுக்கி".. திகைத்த சிவகங்கை
சிவகங்கை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜ நிர்வாகியை மாணவியின் உறவினர்கள் மதுரைக்கு வரவழைத்து நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உள்ள வடகரையை சேர்ந்தவர் ராஜ்குமார்.. 45 வயதாகும் இவர் திருப்புவனம் கிழக்கு ஒன்றிய பாஜக செயலாளராக உள்ளார். மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார்..

பாஜக பிரமுகர்
தன்னுடைய ஊரிலேயே சொந்தமாக டிராவல்ஸ் வைத்து ராஜ்குமார் நடத்தி வருகிறார்.. இதனால், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியரை ஏற்றிச்சென்று வருகிறார்..
அந்தவகையில், 10ம் வகுப்பு மாணவி ஒருவரும் ராஜ்குமாரின் வேனில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.. அந்த பெண்ணுக்கு ராஜ்குமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இதுகுறித்து தன்னுடைய பெற்றோரிடம் அழுதுகொண்டே முறையிட்டிருக்கிறார்..
மதுரைக்கு சென்ற ராஜ்குமார்
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோரும், உறவினர்களும், ராஜ்குமாரை மதுரையில் உள்ள தங்களது வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.. அங்கு ராஜ்குமாரை நிர்வாணமாக்கி சரமாரியாக அடித்து உதைத்திருக்கிறார்கள்.. அத்துடன், ராஜ்குமாரின் செல்போனையும் பறித்து அவரை போட்டோ எடுத்துள்ளனர்..
பிறகு, "நான் ஒரு பொம்பள பொறுக்கி, என்னிடமிருந்து உங்கள் பெண் குழந்தைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்" என்ற மெசேஜ்ஜை டைப் செய்து ராஜ்குமாரின் செல்போனில் உள்ள அத்தனை செல்போன் நம்பர்களுக்கும் அனுப்பிவிட்டு, ஸ்விட்ச்ஆப் செய்துவிட்டனர்.
இதனால் நேற்றெல்லாம் இந்த மெசேஜ் படுவேகமாக வைரலானது.. கடைசியில் பூவந்தி போலீசாரின் கவனத்துக்கும் இந்த வாட்ஸ்அப் மெசேஜ் சென்றுள்ளது.. எனவே இதுகுறித்து விசாரிப்பதற்காக, திருப்புவனம் வடகரை கிராமத்திலுள்ள ராஜ்குமார் வீட்டிற்கு போலீசார் சென்றிருக்கிறார்கள்.. ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டிலிருந்த அத்தனை பேரும் எங்கே போய்விட்டார்கள் என்று தெரியவில்லை.. அத்தனை பேரின் செல்போன்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருக்கிறது..
தீவிர விசாரணை
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய மாணவி தரப்பிலும், தாக்குதலுக்கு ஆளான ராஜ்குமார் தரப்பிலும் போலீசில் புகார் தரவில்லை.. எனினும், பூவந்தி போலீசார் இந்த விவகாரம் குறித்த விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்..
மதுரைக்கு வரவழைத்து, ராஜ்குமார் எங்கே தாக்கப்பட்டார்? பாலியல் தொந்தரவு காரணமாகத்தான் இந்த தாக்குதல் நடந்ததா? சிவகங்கையிலிருந்து மதுரைக்கு ராஜ்குமார் ஏன் கிளம்பி சென்றார்? இப்போது எங்கே இருக்கிறார்? என்றெல்லாம் அனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக பிரமுகரை நிர்வாணமாக்கி தாக்கிய இந்த சம்பவம், மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
அண்ணாமலையிடம் கேளுங்கள்.. தாமரையில் ஒரு இதழை கூட அசைக்க முடியாது..தமிழிசை சௌந்திரராஜன் -
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்! -
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம்












Click it and Unblock the Notifications