"படி தாண்டிய" மனைவியின் போட்டோவுடன் சிவகங்கையில் அலைந்த பரிதாப கணவன்.. வாடகை வீட்டில் பாலியல் சேட்டை
சிவகங்கை: புத்தி தடுமாறினால், ஆபத்தில்தான் போய் முடியும் என்பதற்கு இன்னொரு உதாரணமாக சிவகங்கை சம்பவம் அமைந்துள்ளது.. இந்த சம்பவத்தில் 2 பேரை திருவாடாணை மகளிர் போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தில் அந்த பெண் வசித்து வருகிறார்.. திருமணமான இந்த பெண்ணுக்கு 27 வயதாகிறது.. கணவன், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியை சேர்ந்த இளைஞருடன், இந்த பெண்ணுக்கு திடீர் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞருக்கு இன்னும் கல்யாணமாகிவில்லை.. இந்த பெண்ணைவிட வயதில் மிகவும் சிறியவர்.
இவர்கள் இருவருமே செல்போன் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்கள்.. இதுவே நாளடைவில் கள்ளக்காதலாக உருமாறிவிட்டது. இதனால், அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
வாடகை வீடு: இப்படித்தான், ராமநாதபுரம் – சிவகங்கை மாவட்ட எல்லைப்பகுதிக்கு அழைத்து சென்றிருக்கிறார் இளைஞர்.. அந்த பகுதியிலேயே ஒரு வாடகைக்கு வீடு எடுத்து, அந்த பெண்ணை அங்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை பலமுறை இளைஞர் பலாத்காரம் செய்திருக்கிறார். அதுமல்லாமல், தன்னுடைய நண்பர்களையும் அந்த வாடகை வீட்டுக்கு வரவழைத்து, அந்த பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரமும் செய்ய வைத்துள்ளார்.
நண்பர்கள் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபடுவதை, அந்த இளைஞர் வீடியோ எடுத்துள்ளார்.. இந்த வீடியோவை, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் காட்டி, 5 பவுன் நகை, பணத்தையும் பறித்துள்ளார்.. அதற்கு பிறகும்கூட, 5 நண்பர்கள் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்...
கணவர் அதிர்ச்சி: இதனிடையே மனைவியை வீட்டில் காணாமல் பதறிப்போனார் கணவர்.. அதனால், மனைவியின் போட்டோவை எடுத்துக் கொண்டு, திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேட ஆரம்பித்தார்.. போட்டோவை காண்பித்து, மனைவி பற்றி விசாரித்துள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த சில இளைஞர்கள், வாடகை வீட்டில் அடைத்து வைத்து இந்த பெண்ணை சிலர், பாலியல் பலாத்காரம் செய்வதாக தகவல் தந்துள்ளனர்.. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், திருவாடானை மகளிர் போலீசுக்கு ஓடினார்... இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் திருவாடானை மகளிர் போலீசார், அதிரடி விசாரணையை துவங்கினார்கள்.
தப்பியோட்டம்: அப்போதுதான், பெண்ணை ஏமாற்றி கூட்டு பலாத்காரம் செய்ததும், அதை ஆபாச வீடியோ எடுத்ததும், பெண்ணின் நகை பணத்தை இளைஞர்கள் பறித்து சென்றதும் தெரியவந்தது. அதில் 3 பேரை மட்டும் இப்போதைக்கு பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. தப்பியோடியவர்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.... கூடா நட்பு கேடாய்தானே முடியும்???












Click it and Unblock the Notifications