டபுள் ஆயுள்.. 6 மாணவியை சீரழித்த.. பள்ளி தலைமை ஆசிரியருக்கு 47 வருடம் ஜெயில்.. சிவகங்கை கோர்ட் அதிரடி
சிவகங்கை: 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்... இந்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனையை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது... இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன்.. 54 வயதாகிறது..

கடந்த 2014-ம் ஆண்டு, இவர் தன்னிடம் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்... இதையடுத்து, மாணவிகள் தரப்பில் போலீசில் தரப்பட்ட புகாரையடுத்து, தீண்டாமை ஒழிப்புச் சட்டம் உட்பட 10 பிரிவுகளின் கீழ் ஹெட்மாஸ்டர் முருகனை போலீசார் கைது செய்தனர்... இந்த வழக்கின் விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது...
விசாரணை: இந்நிலையில், இன்றைய தினம் மறுபடியும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 47 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்தும், அதனை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி சரத்ராஜ் அதிரடியாக உத்தரவிட்டார். அபராதமாக 69 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நிவாரணமாக தமிழக அரசு சார்பில் ரூ.29 லட்சம் வழங்க வேண்டும் என்றும் சிவகங்கை போக்சோ சிறப்பு கோர்ட் நீதிபதி சரத்ராஜ் உத்தரவு பிறப்பித்தார்.. அதன்படி, அரசு பள்ளித்தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 47 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தலைமை ஆசிரியர்: இந்த தலைமை ஆசிரியர் முருகன், கடந்த 2014-ம் ஆண்டிலிருந்தே, இந்த பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாராம்.. ஆனால், பள்ளியில் சேர்ந்ததுமே தன் "வேலையை" காட்டியிருக்கிறார்.
அதுவும் 4ம் வகுப்பு, 5ம் வகுப்பு படிக்கும் 6 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தந்திருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பெண் குழந்தைகள் வீட்டில் கொந்தளித்து போய்விட்டார்கள்.. இந்த 6 பேரில், ஒரே ஒரு சிறுமியின் பாட்டி மட்டும், துணிச்சலுடன் சிவகங்கை மகளிர் ஸ்டேஷனுக்கு புகாருடன் சென்றுவிட்டார். பாட்டி அன்று தந்த புகாரின் பேரில்தான், இந்த அளவுக்கு விசாரணை நடந்து தண்டனையும் தரப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள்: நாகர்கோவில் காசி முதல் இந்த ஹெட்மாஸ்டர் முருகன் வரையிலான, "காம பிண்டங்களுக்கு", கடுமையான தண்டனைகளை நீதிமன்றங்கள் வழங்கி வருவது, தமிழக மக்களுக்கு ஆறுதலை தந்து வருகிறது. புதுச்சேரி 9 வயது சிறுமி கொலை வழக்கு உட்பட, போக்சோவில் கைதாகும் அனைவருக்குமே உரிய தண்டனைகளை நீதிமன்றம் தொடர்ந்து தரவேண்டும்..
அதுமட்டுமல்ல, இனிமேல் பெண் குழந்தைகள் மீது "கை" வைக்கவே நடுங்கும் அளவுக்கு இதுபோன்ற போக்சோ தண்டனைகள் அமைய வேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாகும்..!!












Click it and Unblock the Notifications