கழுத்தில் 20 பவுன் நகையோடு நிலம் பார்க்க போன பெண்! கார் கதவில் போன உயிர்! சிவகங்கை காரைக்காலில் ஷாக்
சிவகங்கை: 20 சவரன் தங்க நகையுடன், நிலம் பார்க்க கிளம்பியிருக்கிறார் 38 வயது மகேஸ்வரி.. சொந்தமாக நிலம், வீட்டு மனை வாங்க வேண்டும் என்ற ஆசையில் நேற்றைய தினமும் கிளம்பி சென்றிருக்கிறார்.. அப்போதுதான் இந்த கொடுமை நடந்துள்ளது.. ஆனால் சிவகங்கை போலீசார் வெறும் 5 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்துவிட்டார்கள். விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மருதுபாண்டியர் நகரை சேர்ந்த தம்பதி பாண்டிக்குமார் - மகேஸ்வரி.. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து வருகிறார். இளைய மகள் 8ம் வகுப்பு படித்து வருகிறார். பாண்டிக்குமார் சிங்கப்பூரில் வேலைபார்த்து வருகிறார்.
நிலம் வாங்க ஆசைப்பட்ட மகேஸ்வரி
இந்நிலையில், சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்று மகேஸ்வரிக்கு ஆசை இருந்து வந்தது.. இதற்காகவே நிறைய பகுதிகளுக்கு நேரடியாகவே சென்று, நிலங்களை பார்த்து வந்தார்.. நிலங்களை நேரில் காட்டுவதற்கென வந்த நபர்களை, மகேஸ்வரி தன்னுடனேயே காரில் அழைத்து செல்வார்.. ஆனால், அவைகளில் எதுவுமே இதுவரை திருப்தியாக இருந்ததில்லை.
அப்படித்தான் நேற்று காலையும் சிலரை தன்னுடன் அழைத்துக்கொண்டு காரைக்குடி அருகே ஆவுடைப்பொய்கை பகுதியில் வீட்டுமனை வாங்குவது விஷயமாக சென்றாராம்.. நிலத்தை பார்த்த மகேஸ்வரி, சம்பந்தப்பட்ட வீட்டுமனைக்கான விலை, பட்டா போன்றவற்றை தன்னை அழைத்து வந்த நபர்களிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கும் மகேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் வெடித்து தகராறாக உருவெடுத்துள்ளது.
பட்டா, ஆவணங்கள்
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த கும்பல், மகேஸ்வரி அவரது தலையை கார் கதவில் வைத்து நசுக்கியது.. அவரது கழுத்தை பிடித்து நெரித்தது.. முகத்தையும் கொடூரமாக சிதைத்தது.. இதில் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரி இறந்துவிட்டார்.. பிறகு மகேஸ்வரி அணிந்திருந்த தாலி உள்ளிட்ட 20 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு, சடலத்தையும் அவரது காருக்குள்ளேயே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தங்கத்தாலி 20 சவரன் நகைகள்
ஆவுடையப்பொய்கை காட்டுப்பகுதியில் கார் ஒன்றில் பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவும், போலீசார் சென்ற அவர்கள், மகேஸ்வரியின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் அனுப்பி வைத்தனர்..
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காரில் மகேஸ்வரியுடன் சென்றவர்கள் யார்? இடம் வாங்குவதில் தகராறு ஏற்பட்டு கொலை கொலை செய்யப்பட்டாரா? அல்லது பணம், கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை துவங்கினர்.
20 சவரன் நகையை அந்நபர்கள் எடுத்து சென்றிருப்பதால், அந்த நகைக்காகவே மகேஸ்வரி கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்தது.. இது குறித்து டிஎஸ்பி கவுதம் விசாரணையை கையில் எடுத்த நிலையில், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, காரில் இருந்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது.
சொந்த வீட்டுமனை
இதனிடையே, இந்த கொலை தொடர்பாக மகேஸ்வரி வீட்டின் அருகே வசிக்கும் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மகேஸ்வரிக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்த காரைக்குடி லட்சுமி நகரை சேர்ந்த வேலுச்சாமி மகன் சசிகுமார் (33) என்பவர்தான், மகேஸ்வரியுடன், வீட்டுமனை காட்டுவதற்காக காரில் வந்தது தெரிய வந்தது. எனவே போலீசார் சசிக்குமாரை பிடித்து விசாரித்தபோது மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார்.
அதாவது, தனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மகேஸ்வரி இழுத்தடிப்பு செய்து வந்தாராம்.. அந்த ஆத்திரத்தில்தான் மகேஸ்வரியை கொலை செய்ததாக வாக்குமூலம் தந்துள்ளார்..
அதுமட்டுமல்ல, மகேஸ்வரியிடமிருந்து பறித்து சென்ற நகைகளில், 15 சவரன் தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். மேலும் தன் மீது யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக, மகேஸ்வரியின் செல்போனில் இருந்து, கணவர் பாண்டிக்கு, புரோக்கர் ஒருவரால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக சசிகுமாரே மெசேஜ் அனுப்பி உள்ளார்.
5 மணி நேரத்தில் சபாஷ்
இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, சசிகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அடகு வைத்த நகையையும் மீட்டுள்ளனர்..
பலபேர் இந்த கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில், சசிகுமார்தான் இவ்வளவு கொடூரமான கொலையை செய்திருப்பது உறுதியாகியிருக்கிறது.. சிசிடிவி உதவியுடன் கொலை நடந்த வெறும் 5 மணி நேரத்தில் சிவகங்கை போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications