சிவகங்கை லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE; காங்கிரஸ் கார்த்தி சிதம்பரம் அபார வெற்றி
சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 4,27,677 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுகவின் சேவியர் தாசை விட 2,05,664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 3 ஆம் இடத்தை பிடித்த பாஜகவின் தேவநாதன் 1,95,788 வாக்குகள் பெற்றார்.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்), சேவியர் தாஸ் (அதிமுக), தேவவாதன் ( தேசிய ஜன நாயக கூட்டணி), எழிலரசி ( நாம் தமிழர்) ஆகியோர் களம் காண்கிறார்கள். சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் கட்சி கடந்த 2019 ஆம் ஆண்டு வெற்றி வாகை சூடியது. அப்போதும் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரமே போட்டியிட்டு வென்றார்.

சிவகங்கை லோக்சபா தொகுதி: சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான ஒரு தொகுதியாகவே உள்ளது. கடந்த 2019 ஆம் லோக்சபா தேர்தலில் கார்த்தி சிதம்பரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2024 தேர்தலில் சிவகங்கை தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்கும் அதிமுக, பாஜக கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
இருந்தாலும் இந்த தொகுதியில் கார்த்தி சிதம்பரம் பரிட்சயமான வேட்பாளராக அறியப்படுவதால் அவருக்கே சாதகமாக களம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து இவிஎம் எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் காலை 10.40 மணி நிலவரபடி திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 6009 வாக்குகள் பெற்று பாஜகவின் தேவநாதனை விட 2956 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் 2765 வாக்குகள் பெற்றுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE:
காலை 10. 40 மணி நிலவரப்படி
திமுக கூட்டணி கார்த்தி சிதம்பரம் - 6009
பாஜக தேவநாதன் - 3053
அதிமுக சேவியர் தாஸ் - 2765
நாம் தமிழர் கட்சி எழிலரசி - 2227 பெற்றிருந்தனர்.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிவில் பெற்ற வாக்குகள் விவரம்: திமுக கூட்டணி
கார்த்தி சிதம்பரம் - 4,27,677
அதிமுக சேவியர் தாஸ் - 2,22,013
பாஜக தேவநாதன் - 1,95,788
நாம் தமிழர் கட்சி எழிலரசி - 163412 வாக்குகள் பெற்றனர்.
நோட்டோ - 8189.
முந்தைய தேர்தல் முடிவுகள்: சிவகங்கை லோக்சபா தொகுதி உருவாக்கப்பட்டு, 1967-ம் ஆண்டில் முதல் தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் திமுக வேட்பாளர் தா.கிருட்டிணன் 2,25,106 வாக்குகள் பெற்று வென்றார். 1971-ம் ஆண்டு தேர்தலிலும் மீண்டும் அவரே வெற்றி பெற்றார்.
1977-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் பெரியசாமி தியாகராஜனும், 1980-ல் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.வி.சுவாமிநாதனும், 1984-ல் காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரமும் வெற்றி பெற்றனர். ப.சிதம்பரம் 1989, 1991-ல் காங்கிரஸ் சார்பிலும், 1996, 1998-ல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார்.
எனினும் ஒரே ஆண்டில் ஆட்சி கவிழ்ந்ததில் 1999-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுதர்சன நாச்சியப்பன் வெற்றி பெற்றார். 2004, 2009-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் ப.சிதம்பரம் போட்டியிட்டு வென்றார். 2014-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வென்றார். 2019-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் வென்றார்.
2004 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
ப.சிதம்பரம் ( காங்கிரஸ்) - 4.00,393 வாக்குகள்
எஸ்பி கருப்பையா (அதிமுக) - 2,37,668 வாக்குகள்.
2009 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
சிதம்பரம் (காங்கிரஸ்) - 3,34,348
ராஜகண்ணப்பன் (அதிமுக) : 3,30,994
பரத்வதா ரெஜினா பாபா (தேமுதிக) - 60,054.
2014 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
பிஆர் செந்தில்நாதன் (அதிமுக) - 4,75,993
துரை ராஜா சுபா (திமுக) - 2,46,608
எச்.ராஜா (பாஜக) - 1,33,763.
2019 லோக்சபா தேர்தல் முடிவுகள்:
கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) - 5,66,104
எச்.ராஜா (பாஜக) - 2,33,860
வி.பாண்டி (அதிமுக) - 1,22,534
சக்தி பிரியா (அதிமுக) - 72,240.












Click it and Unblock the Notifications