சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. காரைக்குடியில் பரபரப்பு
சிவகங்கை: சிவங்கை எம்பியாக காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் உள்ளார். இந்நிலையில் காரைக்குடியில் உள்ள அவரது அலுவலகத்தின் மீது இன்று காலையில் சில மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை லோக்சபா தொகுதியின் எம்பியாக கார்த்தி சிதம்பரம் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரது எம்பி அலுவலகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் எம்பி அலுவலகத்தின் உள்ளே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அலுவலகம் அருகே வந்த மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றனர்.
இந்த பெட்ரோல் குண்டு அலுவலகத்தின் முன்புறம் உள்ள முற்றத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து விட்டு எஸ்கேப்பானது. இதுபற்றி உடனடியாக காரைக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காரைக்குடி போலீசார் மற்றும் எஸ்பி சிவபிரசாத் நேரில் சென்று விசாரணையை தொடங்கினர்.
பெட்ரோல் குண்டு வீசியது யார்? எதற்காக வீசினர்? இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications