Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீனு மீனேய்.. சிவகங்கையில் பரவசம்.. திருப்பத்தூர் கண்மாயில் துள்ளி துள்ளி வந்து.. அதென்ன அண்டாவில்?

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதை பார்த்த பலரும் சிலிர்ப்பில் ஈடுபட்டு விட்டார்கள்.

விநோத திருவிழாக்கள் என்பது இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து கொண்டே வருகிறது.. பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள் உள்ளதுபோல, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்களும் நம் மாநிலத்தில் நடத்தப்படுவதுண்டு.

Sivaganga Temple Festival and Amazing fishing festival near Sivaganga Tirupattur Valli Pond

குறிப்பாக, சித்திரை திருவிழாவின்போது, பல்வேறு கோயில்களில் இதுபோன்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் நடத்தி வருகிறார்கள்.. இதுபோன்ற திருவிழாக்களில், ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படுவது கூடுதல் ஸ்பெஷலாகும்.. நள்ளிரவு நேரத்தில் பொங்கல் வைத்து வழிபாடு துவங்குவதுடன், நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகளை பலியிடுவார்கள்.

கறிவிருந்து: பிறகு, விடிய விடிய கறிவிருந்து தயாராகும். காலையில், இந்த கறிவிருந்தினை சுவாமிக்கு படையல் போட்டு, பிறகு, விழாவில் பங்கேற்றவர்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்படும். பெரும்பாலும் விவசாயம் செழிக்கவும், மழைவேண்டியும், இவ்வாறான நடத்தப்படுகின்றன.

இன்றுகூட, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஒரு திருவிழா நடந்துள்ளது.. திருப்பத்தூர் பக்கத்தில் துவார் என்ற கிராமம் உள்ளது.. இந்த மக்களின் பிரதான தொழில் மீன்பிடிப்பது..

மழை வேண்டி: எனவே, வருடா வருடம் மழை கிடைக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, இங்கிருக்கும் வள்ளிக் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கமாகும். குறிப்பாக, நெல் அறுவடைக்கு பிறகு, கோடைகாலத்தில் இந்த திருவிழா நடத்துவார்கள்..

அந்தவகையில், இந்த வருடத்துக்கான திருவிழா இன்று நடைபெற்றது.. மீன்பிடி திருவிழா என்பதால், சுற்று வட்டார கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கானோர் துவார் கிராமத்திற்கு திரண்டு வந்துவிட்டார்கள்.. காலையிலேயே வள்ளி கண்மாயை சுற்றிலும் நின்று அனைவரும் மீன்பிடிக்க தயாரானார்கள். மீன்பிடிப்பதற்கு தேவையான வலை உட்பட பல்வேறு உபகரணங்களையும் கையில் தயாராக வைத்திருந்தார்கள்.

கண்மாய்கள்: ஊர் பெரியவர்களும், வெள்ளைக்கொடியை அசைத்து, மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர். கொடி அசைத்துமே, மொத்த பேரும், கண்மாய்க்குள் தாவி குதித்து, மீன்களை போட்டி போட்டுக் கொண்டு பிடிக்க ஆரம்பித்தார்கள்..

கண்மாயில் இறங்கிய கொஞ்ச நேரத்திலேயே வகை வகையான மீன்களை அள்ளினார்கள்.. கட்லா, விரால், ஜிலேபி, அயிரை, கெண்டை இப்படி ஏகப்பட்ட மீன்களை கூடை கூடையாக கொண்டு வந்து கரையில் கொட்டினார்கள்.. பிறகு, இந்த மீன்களை மூட்டைகளிலும், பெரிய பெரிய அண்டாவிலும் பொதுமக்கள் அள்ளிக் கொண்டு போனார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+