பட்டதெல்லாம் போதும்.. யார்கிட்டயும் சங்கீதா பேசல.. ரூமில் நுழைந்து அடுத்தடுத்த பகீர்.. பரிதாப பிஞ்சு

5 வயது மகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: இளம்பெண் ஒருவர், தன்னுடைய 5 வயது குழந்தையை துண்டால் இறுக்கி தற்கொலை செய்து கொண்டார்.. அத்துடன் தானும் தூக்கிட்டு தொங்கிவிட்டார்.. இந்த பயங்கர சம்பவத்தின் பின்னணி என்ன தெரியுமா?

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசினம்பட்டியில் வாழ்ந்து வருபவர் ஜெயராஜ்... இவர் ஒரு கொத்தனார்.. மனைவி பெயர் சங்கீதா.. கல்யாணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது.

5 வயதில் இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.. இந்த நிலையில் நேற்று உறவினர்களுடன் சங்கீதா இயல்பாகவே பேசிக்கொண்டிருந்தார்..

அதிர்ச்சி

அதிர்ச்சி

பிறகு, திடீரென வீட்டிற்குள் வந்த சங்கீதா, தன்னுடைய மக்களை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டார்.. தன்னுடைய வீட்டிலேயே சேலையில் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு வந்த ஜெயராஜ், மனைவியும் மகளும் சடலமாக இறந்து கிடந்ததை கண்டு அலறி துடித்தார்.. உடனடியாக சிங்கம்புணரி போலீசுக்கும் தகவல் தந்தார்.. அந்த தகவலின் அடிப்படையில் சிங்கம்புணரி போலீசார் விரைந்து வந்து சடலங்களை கைப்பற்றி சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்..

 தாய் மகள்

தாய் மகள்

தாயும் மகளும் ஒரே நேரத்தில் இறந்த சம்பவம் அறிந்த உறவினர்கள் கதறி கதறி அழுதார்கள்.. ஒரே வீட்டில் நடந்த இந்த இரட்டை மரணம், குடும்பத்தினரை நிலைகுலைய வைத்து வருகிறது. ஜெயராஜின் குழந்தைக்கு பிறவியில் இருந்தே உடம்பு சரியில்லையாம்.. ஆசனவாய் துவாரம் இல்லாமல் குழந்தை பிறந்துள்ளது.. அதனால், தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள மருத்துவமனையில்தான் சிகிச்சைக்காக சென்று வருகிறார்கள்.. அந்த மருத்துவமனையிலேயே குழந்தையின் உடல் நலம் பார்த்து, டெஸ்ட் செய்து, அதற்குரிய சிகிச்சையை குழந்தைக்கு தந்து வந்துள்ளனர்..

சகிக்கல

சகிக்கல

ஆனால், மகள் படும் அவதியை சங்கீதாவால் பார்க்க முடியவில்லை.. ஒவ்வொரு நாளும் துடித்து துடித்து அழுதபடியே இருந்து வந்துள்ளார்.. மகள் படும் அவதியை காண சகிக்காமல்தான், கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. எனினும், இதுகுறித்த விசாரணயை துவக்கி உள்ளனர்.. சங்கீதா மரணத்துக்கு வேறேதேனும் காரணமா என்ற கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை பிறந்தபோது இருந்த பாதிப்பைவிட, வளர வளர சிறுமிக்கு நிறைய உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

 இதயமே நொறுங்கிடுச்சு

இதயமே நொறுங்கிடுச்சு

தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும், குணப்படுத்த முடியவில்லை... நாட்கள் செல்லச்செல்ல சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது.. ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு, மகளை அழைத்துச் சென்று சங்கீதா சிகிச்சை அளித்து வந்த நிலையில், செலவும் அதிகமாக ஆகியுள்ளது... அப்படி இருந்தும் குழந்தையின் உடல்நலனில் முன்னேற்றம் இல்லை.. நேற்றும் அப்படித்தான், சங்கீதா தனது மகளை மதுரைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போதிருந்தே அவர் யாருடனும் பேசாமல் கவலையுடன் இருந்த நிலையில், இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+