Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ3.75லட்சம் மானியம்..வேலை இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு தரும் சூப்பர் வாய்ப்பு..மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்த விரும்பும் தமிழக அரசு, அவர்கள் அதற்கான திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. ரூ.3.75 லட்சம் மானியத்தில் ரூ15 லட்சம் வரை இளைஞர்களுக்கு கடன் தருகிறது தமிழக அரசு

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், ஜவுளி, ஆயத்த ஆடைகள் விற்பனை, எலெக்ட்ரிக்கல் கடை, மளிகை கடை, அரிசி கடை, சுவீட் ஸ்டால், செல்போன் விற்பனை, இருசக்கர வாகன உதிரிபாகம் விற்பனை, ஸ்டேசனரி கடை போன்ற பல்வேறு தொழில்களை தொடங்கலாம். இதற்கு தமிழக அரசு கடன் தருகிறது. அந்த கடனும்எப்படி என்றால் 25 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் வரை அரசு மானியம் தருகிறது.

Tamil Nadu Government gives loan to youth up to Rs. 15 lakh out of Rs. 3.75 lakh subsidy

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: "படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்கள் சமூக பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடையும் நோக்கில் தமிழக அரசால் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாவட்ட தொழில் மையம் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எவ்வளவு மானியம் கிடைக்கும்: இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.15 லட்சம் வரையில் வங்கிகடன் உதவியும், திட்ட மதிப்பில் 25 சதவீதம், அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் வரை அரசு மானியமாக வழங்குகிறது.

வயது வரம்பு என்ன: இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவு ஆண்கள் 18 வயது முதல் 45 வயது வரையும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 18 வயது முதல் 55 வயதிற்கும் உட்பட்டு இருத்தல் வேண்டும்.

என்னென்ன தொழில்கள் தொடங்கலாம்: இத்திட்டத்தில் ஜவுளி, ஆயத்த ஆடைகள் விற்பனை, எலெக்ட்ரிக்கல் கடை, மளிகை கடை, அரிசி கடை, சுவீட் ஸ்டால், செல்போன் விற்பனை, செப்பல் கடை, ஹார்டுவேர் மார்ட், பெயிண்ட் கடை, மெடிக்கல் ஸ்டோர், இருசக்கர வாகன உதிரிபாகம் விற்பனை, ஸ்டேசனரி கடை போன்ற விற்பனை தொழில்கள் தொடங்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி: இந்த திட்டத்தில் தொழில் செய்ய ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் உள்ள UYEGP விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய இணைப்புகளை பதிவேற்றம் செய்து வேண்டும். மேலும், பெறப்பட்ட விண்ணப்பத்தின் இரண்டு பிரதிகளை உரிய ஆவணங்களுடன் அந்தந்த மாவட்ட தொழில் மையத்தில் கொடுக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+