வீடு கட்டி புல்லட் ஓட்டக்கூடாதா.. வாளுடன் துரத்திய 3 பேர்.. சிவகங்கை தலித் மாணவரின் சகோதரர் பேட்டி!
சிவகங்கை: சிவகங்கை அருகே மேளக்காடாவர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூக மாணவரான அய்யாசாமி அரசுக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரி முடித்து தனது புல்லட் வாகனத்தில் வீட்டிற்கு வந்த போது, மாற்று சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் அவரை வழிமறித்து, "பட்டியலின சாதியில் பிறந்து எப்படி இந்த புல்லட் வண்டியை ஓட்டலாம், கை இருந்தால் தானே புல்லட் ஓட்டுவ" என்று கையை வெட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உயிரை கையில் பிடித்து கொண்டு வீட்டிற்கு வந்த அவரை அழைத்து சென்று குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதன்பின் அவர் கையை சேர்க்கும் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த வல்லரசு, ஆதி ஈஸ்வரன் மற்றும் வினோத் ஆகிய மூவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கை வெட்டப்பட்ட அய்யாசாமியின் சகோதரர் பேசுகையில், எங்களை இழிவாக, கேவலமாக ஏதோ சாக்கடையை பார்ப்பது போல் பார்க்கிறார்கள். எங்களை மனுசனாகவே பார்ப்பதில்லை, மதிப்பதில்லை. சராசரியாக அனைவரும் செல்லும் பாதையில் பயணிக்க விட மாட்டார்கள், இவர்கள் வண்டியில் போகக் கூடாது, வேகமாக போகக் கூடாது, பெரிய வண்டிலாம் வச்சிருக்காங்கனு கொலை நடத்துகிறார்கள்.

நாங்கள் வீடு கட்டியதில் இருந்து பிரச்சனைகள் கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். வீடு கட்டும் போது இடத்தை அடைப்பது, தண்ணீர் டேங்க்-ஐ உடைப்பது, பள்ளம் தோண்டுவது, பாதை விடாமல் இருப்பது, லைனை கட் செய்வது என்று தொந்தரவு கொடுத்து கொண்டே இருந்தார்கள். இவையனைத்தையும் காவல்துறையிடம் புகாரளிக்க, அவர்கள் அதனை சரி செய்ய என்று சென்று கொண்டே போனது.

புதிதாக புல்லட் வாங்கிய பின், இவங்களா புல்லட்டில் போகுற அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்டாங்கனு என் தம்பியை வெட்டி, சாதியை சொல்லி திட்டி வாள் கொண்டு துரத்தி இருக்கிறார்கள். அவன் உயிருக்கு பயந்து வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறான். நான் அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்த பின், வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். ஆள் இல்லாததால், வீட்டினை சூறையாடி இருக்கிறார்கள்.

"உங்களால் எங்களை என்ன செய்ய முடியும், முடிஞ்சா வந்து பாருங்டா.. உங்க சாவு எங்கள் கைகளில்தான்டா" என்று மிரட்டினார்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து தாக்கப்பட்ட மாணவரின் தாய் பேசும் போது, கல்லூரி முடிந்த பின் என் மகன் ரத்தத்துடன் கதறிக் கொண்டு வீட்டிற்கு ஓடிவந்தான். உடனே வண்டியில் தூக்கி வைத்து மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோம்.
வீட்டினை உடைத்தது யார் என்று தெரியுமா என்று காவல்துறையினர் கேட்டனர். நாங்கள் வயக்காட்டுக்கு சென்றதால், யார் என்று தெரியவில்லை என்றோம். அதற்கு போலீஸ் தரப்பில், வீட்டை உடைத்தவன் பெயரை சொல்லுங்கள்.. தூக்கி கொண்டு வந்து லாடம் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால் தாக்கியவர்களின் பெயரை சொன்னால், என் மகனின் படிப்பு கெட்டுப்போகும்.

வெட்டிப்புடுவாங்கனு பயந்து கொண்டு நாங்கள் சொல்லவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பாக என் மகன் முனியசாமி தண்ணீர் பிடிக்க சென்ற போது, வெட்டுவதற்கு வாளை கொண்டு துரத்தினார்கள். அப்போது நாங்கள் தகவல் கொடுத்த பின், என் மகன் உறவினர்கள் வீட்டிலேயே இருந்துவிட்டான். பின்னர் உடனடியாக போலீசாரிடம் தகவல் கொடுத்த போது, உடனடியாக 3 பேர் வந்தார்கள்.

மறுபடியும் மறுபடியும் பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. நேற்று என் மகன் முனியசாமியை வெட்ட நினைத்தார்கள். அவர் கிடைக்காததால், தம்பியை வெட்டி இருக்கிறார்கள். இதுவரை என் மகன் கண் விழித்து பார்க்கவில்லை. நாங்கள் தலித் என்பதால், தொடர்ச்சியாக தாக்குகிறார்கள். இத்தனை நாட்களாக பிசிஆர் சட்டத்தின் கீழ் புகார் அளிக்கவில்லை. நேற்று மகன் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் புகார் அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications