மாறுதே கோலம்.. "கொஞ்சறாரு" திருமாவளவன்.. பாஜக கூட்டணிக்கு அவர் வரணும்.. விசிகவை அழைப்பது யார் பாருங்க
திருமாவளவன் பாஜக கூட்டணிக்கு வரவேண்டும் என்று இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்
சிவகங்கை: தாங்கள் செய்யும் ஊழலை மறைக்கவே, ஆளுநர் பேச்சை திமுக பெரிதாக்குகிறது என்று வேலூர் இப்ராஹிம் குற்றம் சாட்டி உள்ளார்.. அத்துடன், திருமாவளவன் விரைவில் பாஜக கூட்டணிக்கு வரவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்..!!!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே காரையூரில், பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் சொன்னதாவது:
பாஜகவினர் ட்விட்டர், பேஸ்புக்கில் தமிழ்நாடு என குறிப்பிட்டுள்ளோம். கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. ஆளுநர் ரவி "தமிழகம்" என அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்..

திராவிட கும்பல்
அதற்கு ஒரு காரணம் உண்டு.. தமிழ்நாடு என்றால் தனி நாடு போல தெரியும்... இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சியை இங்குள்ள சதிகார கும்பல், திராவிட மாடல்களை துாக்கி பிடிக்கும் நக்சலைட் மற்றும் பயங்கரவாத கும்பல் தொடர்ந்து பேசி வருகிறார்கள். தமிழ்நாட்டை தனியாக பிரிக்க வேண்டும் என்ற பிரசாரமும் ஓயவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களே பேசுவதால் தான், கவர்னர் தமிழகம் எனலாம் என்று தெரிவித்தார். ஆனால் கவர்னர், தமிழக மக்களுக்கு எதிராக பேசியது போல், திராவிட கும்பல் விமர்சித்து வருவது மக்களுக்கும் தெரியும்.. குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்டது.

சிறுத்தைகள்
கொரோனாவால் அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எடுக்கப்படும் கணக்கெடுப்பில் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இல்லை என்று பிரதமர் மோடி ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் முஸ்லிம்களை அச்சப்படுத்தும் சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினரின் நடவடிக்கைகளை பாஜக முறியடிக்கும். தமிழகத்தில் எல்லா சினிமாக்களையும் ஒரு நிறுவனமே வெளியிட்டு கார்ப்பரேட் போன்று கையகப்படுத்துகின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.. விரைவில் பாஜக கூட்டணிக்கு அவர் வர வேண்டும்" என்றார்.

திருமாவளவன்
திருமாவளவனுக்கு வேலூர் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளது, பல்வேறு தரப்பினரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. கடந்த காலங்களில், விசிக மீது அதிக விமர்சனங்களை வைத்து பேட்டிகளை தந்தவர் வேலூர் இப்ராஹிம்.. ஒருமுறை தன்னுடைய பேட்டியில், "விசிக தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அக்கட்சியில் உள்ளவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் காக்க வந்தவர் போல் வந்து, அவர்களை ரவுடிகளாக மாற்ற முயற்சி செய்கிறார்" என்று குற்றம் சாட்டியிருந்தார்.. சில மாதங்களுக்கு முன்பும் இதே போன்ற விமர்சனத்தை இப்ராஹிம் முன்வைத்திருந்தார்.

திருமா - சேலை
"மத நல்லிணக்கத்தை நாங்கள் முன்னெடுக்கும்போது, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்துக்களுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்... பெரியார் செய்த காரியத்தைத்தான் திருமாவளவனும் செய்கிறார். இஸ்லாமிய அமைப்பான எஸ்டிபிஐ மத வெறித்தனத்தை வெளிப்படுத்தி வருகிறது... இதுபோன்ற அமைப்புகளோடு திருமாவளவன் கொஞ்சுகிறார்... இந்து மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது போல், இஸ்லாமிய அமைப்புகள் செய்யும் தவறுகளையும் தட்டிக் கேட்க வேண்டும். இனியும் இதனை செய்தால் திருமாவளவனுக்கு சேலை கட்டும் போராட்டம் நடத்தப்படும்" என்று காட்டமாக அறிவித்திருந்தார் இப்ராஹிம்.

திரிபுவாதிகள்
இந்நிலையில், திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்துள்ளது, ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.. சமீபத்தில் "பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார்" என்று திருமாவளவன் கூறியுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின.. ஆனால், இதற்கு திருமாவளவனே ஒரு விளக்கம் தந்திருந்தார்.. "பாஜக தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொண்டு, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி போன்ற நிலைப்பாடுகளை எடுத்தால், பாஜகவுடனும் கைகோர்க்க எங்களுக்கு சிக்கல் இல்லை" என்று சொன்னேன். உடனே திரிபுவாதிகள் கிளம்பி வந்துவிட்டார்கள்.. "திருமாவளவன் பாஜகவுடன் கைகோர்க்க தயார்" என்று கிளப்பிவிட்டுள்ளார்கள்..

கரும்புள்ளிகள்
ஒன்று சொல்கிறேன், சிறுத்தை தன் உடம்பில் உள்ள கரும்புள்ளிகளை கூட மாற்றிக்கொள்ளுமே தவிர, பாஜக தன்னுடையை கொள்கையை மாற்றிக் கொள்ளாது.. பாஜகவின் சங்பரிவாரர்களின் புத்தி ஒருபோதும் மாறாது.. அது சாதீயவாத புத்தி.. அது சனாதன புத்தி.. அது மாறவே மாறாது.. அந்த பாஜகவின் அரசின் கொள்கை, பேச்சுக்களைத்தான் எதிர்க்கின்றோம்... அதனால் இந்துக்களுக்கு எதிரானவர்கள் நாங்கள் இல்லை. அதேபோல் பாமகவின் அரசியலுக்கு எதிரானவர்கள் என்றாலும், ஒட்டுமொத்த வன்னியர்களுக்கும் எதிரானவர்கள் இல்லை' என்று மிகப்பெரிய விளக்கத்தை திருமாவளவன் தந்திருந்தார்.. இந்நிலையில், பாஜக கூட்டணியில் வரும்படி, திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருவது, பரபரப்பு நிறைந்த எதிர்பார்ப்பை களத்தில் கூட்டி வருகிறது.
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications