Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிற்க முடியவில்லை என்ற அஜித் குமார் சகோதரர்.. நவீனுக்கு திடீரென என்ன ஆச்சு? தாய்மாமா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சிவகங்கை திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் அவரது சகோதரர் நவீன் குமார் இன்று திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜித் குமாரை போலீசார் விசாரிக்கும் போதே அவரது தம்பி நவீன் குமாரையும் போலீசார் அடித்து விசாரித்துள்ளனர்.

போலீசார் அஜித் குமாரை விசாரிக்கும்போதே நவீனையும் அடித்து விசாரித்து இருக்கிறார்கள். அப்போது கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. கையில் ஏற்பட்ட காயம் கூட குறைந்துவிட்டது மாமா, ஆனால் காலில் இன்னும் வலி போகவில்லை. ஒரு சில நேரங்களில் நிற்க கூட முடியவில்லை. வா மாமா ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துடுவோம் என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்ததாகவும் இதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாவும் அவரது தாய்மாமா கூறியுள்ளார்.

thiruppuvanam-ajith-kumars-brother-also-admitted-to-hospital-uncle-explains-his-condition

9 பவுன் நகை மாயம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித் குமார். இவரது தம்பி நவீன் குமார். கடந்த 27 ஆம் தேதி பேராசிரியர் நிகிதா என்பவர் மடப்புரம் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது அவர் தன்னுடைய காரை பார்க்கிங் செய்யச் சொல்லி காவலாளி அஜித் குமாரிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அவர் கார் ஓட்டத் தெரியாது என்று கூறி உதவிக்கு ஒருவரை அழைத்து அவர் மூலமாக பார்க் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த காரில் 9 பவுன் நகை இருந்ததாகவும், அதனை காணவில்லை எனவும் நிகிதா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் அஜித் குமாரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

அஜித் குமார் மரணம்

அப்போது அவரை தனிப்படை போலீசாரும் அடித்து உதைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் அஜித் குமார் உயிரிழந்துள்ளார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உடலில் 44 காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததும், இது சாதாரண மரணம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நீதிமன்றமும் இந்த வழக்கில் போலீசார் மற்றும் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து நீதிபதி ஜான் சுந்தர்லால் தலைமையில் விசாரணை அமைக்கப்பட்டது. அதன்படி விசாரணை நடந்து வருகிறது.

நவீன் குமார் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் அஜித் குமாரின் தம்பி நவீன் குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜித் குமாரை தனிப்படை போலீசார் விசாரிக்கும் போதே, அவரது சகோதரர் நவீனையும் போலீசார் அடித்து தாக்கியிருக்கிறார்கள். இதில் கை மற்றும் காலில் நவீனுக்கு காயம் இருப்பதாக அப்போதே கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று திடீரென நவீன் குமார் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நவீன் குமாருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் நவீன் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட என்ன காரணம் என அவரது தாய் மாமா புதிய தலைமுறை தனியார் செய்தி சேனலுக்கு விளக்கமளித்துள்ளார்.

தாய் மாமா விளக்கம்

நவீன் குமாரின் தாய் மாமா கூறியதாவது:- நவீன் என்னிடன் 2 நாட்களாகவே கால் அதிகமாக வலிக்கிறது. மருத்துவமனைக்கு போகவேண்டும் என்று சொல்லி வந்தார். நேற்று போவதாக இருந்தது. ஆனால் நேற்று போக முடியாமல் போனது. போலீசார் அஜித் குமாரை விசாரிக்கும்போதே நவீனையும் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது நவீனுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டு இருந்தது.

நிற்க கூட முடியவில்லை

கையில் ஏற்பட்ட காயம் கூட குறைந்துவிட்டது மாமா, ஆனால் காலில் இன்னும் வலி போகவில்லை. ஒரு சில நேரங்களில் நிற்க கூட முடியவில்லை. வா மாமா ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துடுவோம் என்று என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தான். இதனால் தான் இன்று நாங்க மருத்துவமனைக்கு வந்தோம். மற்றபடி ஏதுமில்லை. நவீன் குமார் நார்மலாக தான் இருக்கிறான்.

இப்போது கூட சாப்பாடு வாங்கி கொடுத்தேன். நலமுடன் தான் இருக்கிறான். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ரத்தம் டெஸ்ட் உள்பட சில பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் டாக்டர்கள் எதுவும் சொல்லவில்லை. மருத்துவமனையில் கேட்டாங்க எப்படி இந்த காயம் ஏற்பட்டது என்று, அதற்கு போலீசார் தாக்கியதில் ஏற்பட்ட காயம் என்று தான் நவீன் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+