ஜன நாயகனுக்காக நேற்று பிள்ளையார்பட்டியில் புஸ்ஸி ஆனந்த்.. இன்று நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்
சிவகங்கை: நடிகர் விஜயின் கடைசி படமான 'ஜன நாயகன்' திரைப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்துக்கான ‛சென்சார்' சான்று கிடைக்காததால் தேதி குறிப்பிடாமல் படம் வெளியாகும் தேதியை தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்திருக்கிறது. இதனால், விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள உலகப் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோவிலில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஜனநாயகன் போஸ்டரை வைத்து சாமி தரிசனம் செய்தார்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்', தணிக்கை வாரியக் கெடுபிடிகளால் திட்டமிட்டபடி இன்று 9-ந்தேதி வெளியாகவில்லை. இது விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது அரசியல் வருகையை தடுக்கவே மத்திய அரசு தணிக்கை வாரியம் மூலம் அழுத்தம் கொடுப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினரும், ரசிகர்களும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்தவழக்கில், மத்திய அரசுதாக்கல் செய்த பதில் மனுவில், தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், "ரூ.500 கோடிக்கு எடுத்த படமாக இருந்தாலும், ஒரு கோடி ரூபாய்க்கு எடுத்த படமாக இருந்தாலும், தணிக்கை வாரியத்துக்கு அனைத்து திரைப்படங்களும் ஒன்றுதான். மனுதாரர் 9-ந்தேதி திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவித்து விட்டார் என்பதற்காக அவருக்கு தணிக்கை சான்றிதழ் உடனே வழங்கி விடவேண்டும் என்று நிர்பந்திக்க முடியாது.
மத உணர்வை புண்படுத்தும் விதமான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது. எனவே மறுஆய்வு குழுவுக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருந்தது.இந்தவழக்கில் இன்று தீர்ப்பு வருகிறது. இந்த தீர்ப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள உலகப் புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோவிலில் தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் ஆனந்த் ஜனநாயகன் போஸ்டரை வைத்து சாமி தரிசனம் செய்தார்.
புஸ்ஸி ஆனந்த் கற்பக விநாயகரை தரிசித்த பிறகு கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி வந்து மருத மரம் அருகே ஜனநாயகன் போஸ்டரை வைத்தும், பரிவார தெய்வங்களையும், நவகிரகங்களையும் சுற்றி வந்து வழிபாடு செய்தார். பின்பு 108 தேங்காய் உடைத்து படம் வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் நீங்குமாறு வேண்டினார். கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி கரூர் பிரச்சனை காரணமாக வழக்கு நிலுவையில் இருந்த போது இதேபோன்று பிள்ளையார்பட்டிக்கு வருகை தந்து வழிபாடு நடத்தினார். தற்பொழுது ஜனநாயகன் படம் பிரச்சனை நிலவி வரும் நிலையில் மீண்டும் வழிபாடு செய்துள்ளார். இதனிடையே இன்று காலை யுஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பிய சென்சார் போர்டின் உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ஸ்பெஷல் ஐட்டம்.. வில்லிவாக்கத்தில் களமிறங்கும் சபரீசனின் வலதுகரம் -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications