அரசின் திட்டங்கள் கடைக்கோடி பகுதிக்கும் சென்றடைய வேண்டும்! அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அட்வைஸ்!
சிவகங்கை: அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறுவுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
இதனிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது;

கடைக்கோடி பகுதி
முதலமைச்சரால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்களும், கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப் பெறச் செய்யும் வகையில், சிறப்பான பணிகளை அனைத்துத்துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் பொருட்டும், அனைத்துப்பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

என்னிடம் சொல்லலாம்
மேலும், துறைகள் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்தும், அதில் மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்கள் என்னிடம் எடுத்துரைக்கலாம். தாங்கள் துறை ரீதியாக எடுத்துரைக்கும் கருத்துக்கள் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், உரிய பயன்களை உடன் மேற்கொள்ளும் பொருட்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதிகாரிகள் புள்ளி விவரம்
அதிகாரிகள் அமைச்சர் உதயநிதி பேசியதன் தொடர்ச்சியாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வித்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைப் பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை ஆகியத் துறைகளின் சார்பில், துறை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அதன் பயன்கள், தேவையான நிதிநிலைகள் ஆகியன குறித்த அதிகாரிகள் புள்ளி விவரங்களுடன் அமைச்சர் உதயநிதியிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

குறிப்பெடுத்த உதயநிதி
அதிகாரிகள் தன்னிடம் கூறிய பிரச்சனைகள், நடைமுறை சிக்கல் குறித்தெல்லாம் குறிப்பெடுத்த உதயநிதி ஸ்டாலின், இது தொடர்பாக முதல்வருடன் கலந்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல், சிவகங்கை என 2 மாவட்டங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களிலும்மிக சீரியஸாக அதிகாரிகளின் பேச்சை அமைச்சர் உதயநிதி கூர்ந்து கவனித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications