Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் நாளை காரைக்குடியில் பிரச்சாரம்.. மரங்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. ப்ளூ சட்டை மாறன்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: காரைக்குடியில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதால் மரங்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது என்றும் விஜய் ரசிகர்கள் மரத்தில் ஏற முடியாத அளவிற்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று செய்தி வீடியோ ஒன்றை பகிர்ந்து திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன் கருத்து பதிவிட்டுள்ளார். இதற்கு தவெக நிர்வாகிகளும், ரசிகர்களும் எதிர்வினை ஆற்றி வருகிறார்கள்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாளை காரைக்குடி தொகுதியில் பிரச்சாரம் செய்ய உள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் பிரபுவிற்கு ஆதரவாக நாளை காரைக்குடி சாலைகளில் தீவிர பிரச்சாரத்தில் விஜய் ஈடுபட இருக்கிறார். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சி அலுவலகம், கண்ணதாசன் மணிமண்டபம் பகுதியில் தேவர் சிலை நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தவெகவினர் அனுமதி கேட்டிருந்தார்கள்.

Vijay to Campaign in Karaikudi

அதன்படி விஜய் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள பகுதிகளில் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர் தேவகோட்டை கோட்டாச்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் அனுமதி கிடைப்பது உறுதியாகி உள்ளது. விஜய் பிரச்சாரம் செய்ய உள்ள தேவர் சிலை பகுதியில் உள்ள மின்மாற்றி, மின் கம்பங்கள், திறந்த வெளி சாக்கடை கால்வாய், உயரமான மரங்கள் தகர சீட் வைத்து அடைத்துள்ளனர்.

இதனை கிண்டல் செய்துள்ள திரைப்பட விமர்சகர் புளு சட்டை மாறன், காரைக்குடியில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதால் மரங்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது என்றும் விஜய் ரசிகர்கள் மரத்தில் ஏற முடியாத அளவிற்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதற்கு தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் கடுமையான எதிர்வினையாற்றி வருகிறார்கள். கடுமையான மொழியில் ப்ளூ சட்டை மாறனைவிமர்சிக்கிறார்கள். பதிலுக்கு ப்ளூ சட்டை மாறனும் கிண்டல் செய்கிறார்கள்.

முன்னதாக விஜய்யை சுட்டிக்காட்டி ரஜினியையும் ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், "விஜய்யை கண்டு அலறும் தலீவர்: இந்த தேர்தலில் தவெக தோற்றால்.. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளை விட பெரிய மகிழ்ச்சியில் இருக்கப்போவது தலைவர்தான்.

ஆனால் சினிமா வியாபாரத்தில் இவரை எப்போதோ முந்திவிட்டார் விஜய். இந்த தேர்தலில் தோற்றால் அடுத்த முறை ஜெயிக்கலாம். அப்போது அழுது புலம்ப போவதும் தலைவர்தான்.

25 வருடங்களாக அரசியலுக்கு இதோ வரேன், அதோ வரேன் என ரசிகர்கள் தலையில் மிளகாய் அரைத்து.. படங்களை ஹிட்டாக்கி கொண்டு.. பல கோடி சம்பாதித்தார். 2021 தேர்தலில் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிப்பேன் என கூறினார். கடைசியில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி அரசியலுக்கு வராமல் தப்பினார். 25 வருடங்களாக காத்திருந்து பெரிய ஏமாற்றம் அடைந்தாலும்.. அவர் உடல்நிலைதான் முக்கியம் என ஆறுதல் அடைந்தனர் ரசிகர்கள்.

ஆனால் அதன்பிறகு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரு பச்சோந்தித்தனத்தை யாரும் செய்ததில்லை. சிரஞ்சீவி, பவன் கல்யாண், எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், விஜய் உள்ளிட்ட யாரும் இப்படி ரசிகர்களை ஏமாற்றவில்லை. சொன்னபடி அரசியலுக்கு வந்தார்கள். வெற்றி, தோல்வி இரண்டாம் பட்சம். இத்தேர்தலில் தவெக தோற்றாலும்.. அடுத்து வரும் உள்ளாட்சி, நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் சில பல இடங்களில் ஜெயிக்கலாம். ஆகவே தலீவரின் சந்தோஷம் நிலையானதாக இருக்காது.

சினிமா மற்றும் அரசியலில் உங்களை விட பெரிய இடத்தை விஜய் பிடித்து விட்டார். அவருக்கு கூடும் பிரம்மாண்ட இளைஞர் கூட்டத்தை டிவியில் கண்டு கடுப்பாகி விட்டார் தலீவர். அதனால்தான் விஜய் சம்மந்தப்பட்ட விஷயங்களில் அவருக்கு எதிராக மறைமுக பதில்களை தந்து வருகிறார்.
கதறுங்க தலீவரே. கதறுங்க." என்று கிண்டல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+