"கறுப்பு ஆடு".. விபச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் நிர்வாகி.. அதுவும் மகளிரணி தலைவியாம்.. கணவர் வேற
விருதுநகர் பகுதியில் கணவருடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கைதானார்
சிவகங்கை: விருதுநகரில் பாலியல் தொழில் நடத்தியதாக அதிமுக மகளிரணித் துணைத் தலைவி மற்றும் அவரது கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகரில், சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக, கடந்த வருடம் முன்பு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தது.
இதையடுத்து, அனுமதியின்றி நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பா குறித்து அறிக்கை அளிக்கும்படி உளவுத்துறைக்கு, கமிஷனர் உத்தரவிட்டிருந்த நிலையில், அனுமதி பெறாமல் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்த புள்ளிவிவரங்களுடன் கூடிய அறிக்கையையும் போலீசாரும் அளித்திருந்தனர்.

மசாஜ் சென்டர்
அந்த அறிக்கையில், அனுமதியின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் நடத்தப்படும் மசாஜ் சென்டர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். இதையடுத்துதான், 12 தனிப்படையின் கீழ் 150 குழுவை 151க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சட்டவிரோதமாக மசாஜ் சென்டர் நடத்தியதில் சில "மாஜிக்களும்" அடங்குவார்களாம்.. இவர்களுக்கு இந்த ஸ்பா & மசாஜ் சென்டர்களுடன் நேரடி தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாக அப்போது செய்திகள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சுழன்ற சாட்டை
அதேபோல, தமிழகம் முழுவதும் மசாஜ் சென்டர் என்ற பெயரில், விபச்சாரம் நடத்தப்படுவது அதிகரித்து வருவதால், அது தொடர்பான தடுப்பு நடவடிக்கையையும் காவல்துறை தீவிரப்படுத்தியது.. மேலும், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வேலைதேடி வரும் இளம்பெண்களை வேலை வாங்கி தருவதாக சொல்லி அவர்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதும் அதிகமாகி வருவதால், இதுகுறித்தும் காவல்துறை சாட்டையை சுழட்டியது. அதனால் சந்தேகத்திற்கிடமான இடங்களிலும், ரகசிய தகவல் கசியும் இடங்களிலும் திடீர் சோதனைகள், அதிரடி ஆய்வுகளை நடத்தி வருவதுடன், பாதிக்கப்பட்ட பெண்களையும் அங்கிருந்து மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது.

மசாஜ் சென்டர்
கடந்த வாரம்கூட, காரைக்குடி பகுதியில் 2 மசாஜ் சென்டர்களில் சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருந்தனர்.. வறுமையை பயன்படுத்தி இளம்பெண்களை இந்த விபசாரத்தில் 2 மசாஜ் சென்டர்களும் பயன்படுத்தியது தெரியவந்தது.. இந்த மசாஜ் சென்டர்களின் ஓனர்களிடம் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அவைகளை கொண்டு ஆய்வு செய்யப்போவதாக கூறினார்கள்.. காரணம், அதில் முக்கிய பிரமுகர்களின் செல்போன் நம்பர்கள் இருந்ததாம்.. அவர்களின் உதவியுடன்தான் இந்த விபச்சாரம் நடந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.

நிஜமாவே சிக்கினார்
சிக்க போகும் அந்த முக்கிய பிரமுகர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது.. ஆனால், அதற்குள் விருதுநகரில் மற்றொரு சம்பவம் நடந்து, நிஜமாகவே ஒரு அரசியல் பிரமுகர் சிக்கி உள்ளார்.. விருதுநகர் கொல்லர் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்.. 42 வயதாகிறது.. இவரது மனைவி அமல்ராணி,... விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத்தலைவியாக உள்ளார்... இந்த தம்பதியர் விருதுநகர் பேராலி ரோடு ஐடிபிடி காலனியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் கடந்த சில நாட்களாக பாலியல் தொழில் நடப்பதாக விருதுநகர் ஊரக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

அமல்ராணி
பிறகு, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டதில், பாலியல் தொழிலில் அவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக மகளிரணி துணைத்தலைவி அமல்ராணி மற்றும் அவரது கணவர் சந்திரசேகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.. பாலியல் தொழில் நடத்திய அதிமுக மகளிரணி நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அதேபோல, காரைக்குடி விபச்சார வழக்கிலும், சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்கள் யார் என்ற விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறதாம்..!!
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications