வட்டி மேல வட்டி.. என்னால முடியலைங்க.. சாக போறேன்.. விஷம் குடித்த பெண்.. வீடியோவால் பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
சிவகங்கை: "வட்டி மேல வட்டி கேட்டுட்டே இருக்காங்க.. அதனாலதான் தற்கொலை செய்ய போறேன்" என்று கந்துவட்டிக்காரர்கள் மீது புகாரை சொல்லி விஷத்தை குடித்த பெண்ணின் வாட்ஸ்அப் வீடியோ வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள பகுதி லாடனேந்தல். இங்கு வசித்து வருபவர் மாரீஸ்வரி. இவருக்கு 44 வயதாகிறது.
இவரது கணவன் செந்தில்குமார், மதுரை பசுமலை வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்க்கிறார். இவர் வீடு கட்டுவதற்காக பன்னீர்செல்வம், கீதா, பானுமதி, சதீஷ்குமார் ஆகியோரிடம் மொத்தமாக ரூ.1 லட்சம் வாங்கி இருக்கிறார்.

வட்டி மேல் வட்டி
இந்த ஒரு லட்சம் ரூபாய்க்கு வட்டி மேல வட்டி கட்டிக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் அசலும் கட்டிவிட்டார். மொத்தமாக கணக்கு பார்த்தால், ஒரு லட்சத்துக்கு அசலும் வட்டியுமாக சேர்த்து ரூ.6 லட்சம் அவர்களுக்கு திருப்பி கொடுத்திருக்கிறார் மாரீஸ்வரி. ஆனால் கொஞ்ச நாளாக நிலைமை என்னவென்றால், அசலையும் கட்டிவிட்ட நிலையில் இன்னும் 4 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது என்று கந்துவட்டிகாரர்கள் சொல்கிறார்களாம்.

போலீசில் புகார்
அதுவும் இல்லாமல் இந்த 4 லட்சத்தை எப்போது தரப்போகிறாய் என்று கேட்டு தொந்தரவு செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். அது மட்டும் அல்லாமல், கந்துவட்டிக்காரர்கள் தன்னை டார்ச்சர் செய்வதாக திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் மாரீஸ்வரி புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த புகாரை போலீசாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

செத்து போயேன்
கந்துவட்டிக்காரர்களோ, மாரீஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். அதோடு "பணத்தைக் தராவிட்டால், உன் புருஷனை கொன்னுடுவோம், வாங்கின பணத்தை தரலைன்னா, விஷம் குடிச்சு செத்து போக வேண்டியதுதானே" என்றும் கடுமையாக பேசியிருக்கிறார்கள்.

வேற வழியில்லை
இந்தநிலையில்தான் மாரீஸ்வரி வாட்ஸ் அப்பில் நிலைமையை விளக்கி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் அழுதுகொண்டே பேசியுள்ளார். "அசல் பணம் எல்லாத்தையும் கட்டிட்டேன். ஆனா இன்னும் ரூ.4 லட்சம் கேட்டு கந்துவட்டிக்காரங்க தொந்தரவு செய்றாங்க. எனக்கு உயிரை விடுவதைத் தவிர வேறுவழியில்லை" என்று பேசி விஷத்தையும் குடித்துவிட்டார்.

அழுதுகொண்டே வீடியோ
உடனடியாக மாரீஸ்வரி மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான விசாரணை இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனினும் மாரீஸ்வரி அழுதுகொண்டே பேசிய இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications