ஓரிரு நாளில் முடிவை அறிவிப்பேன்.. ஜி.கே.வாசன்

Subscribe to Oneindia Tamil

சிவகாசி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்த முடிவை ஓரிரு நாளில் அறிவிப்பேன் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸும் இணையும் என்று கூறப்படுகிறது. இரப்பினும் தேமுதிக போலவே இதன் நிலையும் குழப்பமாகவே இருக்கிறது.

gk vasan comments on Admk alliance talks

அதிமுக இந்தக் கட்சிக்கு ஒரு தொகுதி கொடுப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 2 சீட் கேட்டு வருகிறாராம் வாசன். ஆனால் தேமுதிக வராவிட்டால் 2, வந்தால் 1 என்பது அதிமுகவின் கடைசி ஆபராக உள்ளதாம்.

எனவே தேமுதிகவின் வருகையையொட்டியே தமாகாவின் நிலையும் இருக்கும் என்பதால் அது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிவகாசியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார் ஜி.கே.வாசன்.

அப்போது அவரது கட்சியின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, த.மா.காவின் தேர்தல் நிலைப்பாட்டை அதிமுகவிடம் தெரிவித்துள்ளோம்.

கூட்டணிக்குழு தொடர்ந்து கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதிமுகவுடன் ஒத்தக்கருத்து ஏற்படுமேயானால் கூட்டணி குறித்து இறுதி முடிவை ஒரிரு நாளில் அறிவிப்பேன் என்றார் வாசன்.

எத்தனை தொகுதிகள் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+