தொலைத்துவிடுவேன் உன்னை! நான் என்ன பைத்தியகாரனா? மாஃபா பாண்டியராஜனுக்கு ராஜேந்திர பாலாஜி மிரட்டல்
சிவகாசி: நான் அதிமுகவில் குறுநில மன்னர்தான். மாஃபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடுமையாக பேசியுள்ளார். சிவகாசியில் தனக்கு பொன்னாடை போர்த்த வந்த நிர்வாகியின் கன்னத்தில் அறைந்ததை கண்டித்து சென்னையில் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்ததற்கு ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
சிவகாசியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் மேடையில் அமர்ந்திருந்தவர்களுக்கு பொன்னாடை அணிவிக்க நிர்வாகிகள் வந்தனர். அந்த வகையில் வி்ருதுநகர் கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் (52), பொன்னாடை அணிவிக்க வந்தார்.
ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்துவிட்டு அருகே இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவிக்கச் சென்றார். அப்போது திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த ராஜேந்திர பாலாஜி, "யார் மாவட்டச் செயலாளர் என தெரியாதா" என கேட்டு நந்தகுமார் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
இதையடுத்து நந்தகுமாரை மேடையிலிருந்து இறக்கி மற்ற நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். அப்போது மாஃபா பாண்டியராஜனும் ராஜேந்திர பாலாஜி உள்பட அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு புறப்பட்டார். ராஜேந்திர பாலாஜி வணக்கம் சொல்லும் போது கூட முகத்தை கடுகடுவென வைத்திருந்தார்.
இதையடுத்து சென்னை வந்த மாஃபா பாண்டியராஜன், விருதுநகர் மாவட்ட அதிமுகவில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர் போல செயல்படுவதாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், நீ (மாஃபா) செய்வதெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க நான் கிறுக்கனோ பைத்தியகாரனோ இல்லை, தொலைத்துவிடுவேன்.
அதிமுகவை காட்டிக் கொடுத்தவர் மாஃபா பாண்டியராஜன். எனக்கு வரலாறு இருக்கு, உனக்கு என்ன வரலாறு இருக்கு? அதிமுகவில் நான் ஒரு குறுநில மன்னர்தான். எனக்கு பின்னால் உள்ள தொண்டர்கள் வாள் ஏந்திய படைவீரர்கள்.
என்னை பற்றி பேச வேண்டும் என்றால் விருதுநகரில் வைத்து பேச வேண்டும். சென்னையில் சென்று ஏன் மாஃபா பேசுகிறார்? வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் அதிமுக இயக்கத்தில்தான் இருப்பேன். அதிமுகவிற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து எடப்பாடிக்கு குழி பறிக்கும் வேலை நடந்து வருகிறது.
விருதுநகர் மாவட்ட அதிமுகவில் என்னை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. அதிமுகவை வாழ வைக்க எந்த நிலைக்கும் நான் செல்வேன். எடப்பாடிக்கு எதிராக யார் வந்தாலும் அரிவாள், துப்பாக்கி ஏந்தி நிற்பேன். உன்னால் முடியுமா? மாவட்டச் செயலாளரான நான் இருக்கும் போது மாஃபாவுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா? பல கட்சிக்கு சென்றுவிட்டு வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால்தான் கன்னத்திலே அறைந்தேன் என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் "உன் மீது ஏதாவது வழக்கு இருந்தால் உடனே வேறு கட்சிக்கு சென்றுவிடுவாய், ஆனால் நான் அப்படி இல்லை. போராடுவேன். நான் சிபிஐக்கே பயப்பட மாட்டேன். பாஜக, தேமுதிக, அதிமுக, ஓபிஎஸ் அணி, மீண்டும் அதிமுக என கட்சி மாறியவர் என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்திருந்தார்.
மேடை நாகரீகம் கருதி மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததற்கு நிர்வாகியை ராஜேந்திர பாலாஜி அடித்தது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமென்ட்டில் சொல்லுங்கள்.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications