பேய் மாதிரி.. துரத்தி வரும் 4 விஷயம்! இந்திய அணிக்கு.. இன்று செமி பைனலில் காத்திருக்கும் பெரிய சவால்
சென்னை; இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை செமி பைனல் ஆட்டம் இன்று நடக்க உள்ளது. இந்திய அணிக்கு இன்று நடக்கும் போட்டியில் 4 பெரிய சவால்கள் உள்ளன.
இந்த முறை செமி பைனலுக்கு 9 முறை தொடர் வெற்றிகளோடு இந்தியா சென்றுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்தை ஒருமுறை இந்தியா இந்த தொடரில் வீழ்த்தியும் விட்டது. இந்திய அணி எப்போதுமே லீக் ஆட்டங்களில் நன்றாக ஆடி உள்ளது. ஆனால் செமி, பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் தோனிக்கு பின்பாக எந்த கேப்டனும் சரியாக ஆடவில்லை.

அந்த அழுத்தம் இப்போதும் இந்திய அணிக்கு இருக்கும். அதை சரி செய்ய இந்திய அணி கஷ்டப்பட வேண்டும். இதுவே பெரிய அழுத்தத்தை இந்திய வீரர்களுக்கு கொடுக்கும். இந்த சீசனில் ஒருமுறை கூட தோல்வியே அடையாமல் பைனலுக்கு இந்திய அணி சென்றுள்ளது. இன்னும் 2 போட்டிகளில் மட்டும் வென்றால் போதும் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றுவிடும். அதோடு இல்லாமல் இந்த முறை இந்திய அணி முழு ஃபார்மில் இருக்கிறது. மற்ற அணிகளை விட வலுவாக இருக்கிறது. இதனால் இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
வெற்றிக்கு வாய்ப்பு உள்ளதா? சவால்கள்: இந்திய அணிக்கு இன்று நடக்கும் போட்டியில் 4 பெரிய சவால்கள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
சவால் 1: 2011 உலகக் கோப்பைக்கு பின் நடந்த நாக் அவுட் சுற்றுகள் அனைத்திலும் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது. ஒன்று செமி பைனல் அல்லது பைனல் என்று எதை எடுத்துக்கொண்டாலும் அதில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது. இது நாக் அவுட் பிரஷர் காரணமாக வரக்கூடிய தோல்வி. இந்த மேட்சில் தோல்வி அடைந்தால் கதை முடிந்தது என்ற அழுத்தம். இதனால் அதிகம் சொதப்பும் வீரர்கள் இன்று நடக்கும் மேட்சில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
சவால் 2: இரண்டாவது விஷயம் பெரும்பாலும் நாக் அவுட் போட்டிகளில் இந்திய அணியில் சொதப்புவது டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் பேட்டிங்தான். டெஸ்ட் போட்டிகளில் பவுலிங் நாக் அவுட் போட்டிகளில் சொதப்பும். ஆனால் பேட்டிங் ஒருநாள் போட்டிகளில் சொதப்பும். 2019 உலகக் கோப்பையிலும் இதுதான் நடந்தது. இதை சரி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
சவால் 3: இந்திய அணிக்கு பெரிய சவால் போல்ட் என்பதை விட... மிட்சல் சான்டனர்தான். அவரின் ஆட்டம்தான் இந்திய அணிக்கு அதிக பிரஷர் கொடுக்கும். அதிலும் இன்றைய பிட்சில் புற்கள் சுத்தமாக இல்லை. புற்கள் இல்லாமல் பிட்ச் ஸ்லோவாக இருக்கும். இதனால் நியூசிலாந்தின் ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும்.
சவால் 4 : இந்திய அணியின் ஆடும் 11 பேர் அணியில் மாற்றம் செய்ய கூடாது. பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கிறது என்பதற்காக அஸ்வினை கூடுதலாக எடுக்க கூடாது. நாக் அவுட் ஆட்டங்களில் கூடுதல் பேட்ஸ்மேன் அவசியம் என்பதால் சூர்யா குமார் யாதவை நீக்கி அஸ்வினை சேர்ப்பது என்பது முட்டாள்தனமான முடிவாக இருக்கும். அந்த தவறை மட்டும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்யவே கூடாது.












Click it and Unblock the Notifications