2000 கேமரா.. அவசர நடவடிக்கை எடுத்த போலீஸ்! இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன் பரபரப்பு! என்னாச்சு
அகமதாபாத்: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் போட்டிக்கு முன்பாகவே அகமதாபாத்தில் போலீசார் அவசர நடவடிக்கை எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
50 ஓவர் உலககோப்பை போட்டியை இந்தியா நடத்தி வருகிறது. இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தான் அகமதாபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடங்கி உள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் அது ஹைவொல்டேஜ் மேட்சாக பார்க்கப்பட்டு வருகிறது.
இதனால் இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை காண ஆவலாக உள்ளனர். இந்த உலககோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தாங்கள் மோதிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கிஸ்தான் நெதர்லாந்து, இலங்கையை தோற்கடித்துள்ளது. நம் நாடு ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி உள்ளது. இதனால் 3வது வெற்றியை யார் பெறப்போகிறார்கள் என்பதற்கான யுத்தம் இதுவாக அமைய உள்ளது. இது போட்டியில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று போட்டி நடக்கும் மைதானம் என்பது இந்தியாவில் மிகப்பெரியது. மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த போட்டியை மத்திய அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினி உள்பட பல பிரபலங்கள் நேரில் பார்த்து ரசிக்க உள்ளனர். மேலும் போட்டியை பார்க்க நேற்று இரவு முதலே ரசிகர்கள் அகமதாபாத்தில் குவிய தொடங்கினர். இதனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே அகமதாபாத் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் பரபரப்பான சூழல் உருவானது.
இந்நிலையில் தான் இன்றைய கிரிக்கெட் போட்டியில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வழக்கமான போட்டிகளை விட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநில போலீசார் 6 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுதவிர என்எஸ்ஜி எனும் தேசிய பாதுகாப்பு படை, ஆர்ஏஎப் எனும் அதிவிரைவு படை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மைதானத்தில் தயாராக உள்ளனர்.
இவர்கள் மொத்தம் 5 பிரிவுகளாக பணி செய்ய உள்ளனர். மைதானம், போக்குவரத்து இடங்கள், வாகன நிறுத்தம் என அனைத்து இடங்களிலும் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். மேலும் மைதானத்தை சுற்றியும், நகரங்களின் முக்கிய சந்திப்புகளிலும் 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் அசைவுகளையும் கண்காணிக்கும் வகையில் அவசர நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுபற்றி குஜராத் டிஜிபி விகாஷ் சகாய் கூறுகையில், ‛‛இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பிரச்சனையின்றி முடிக்கும் வகையில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார், தீவிரவாத ஒழிப்பு படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் போட்டி முடிந்த பிறகும் கூட இரவு முழுவதும் கடந்து நாளை காலை 10 மணி வரை போலீசார் அலர்ட்டாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போட்டியின் போதும், போட்டி முடிவடைந்த பிறகும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக எஸ்பிக்கள், கமிஷனர்கள், ஐஜிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் மக்களும் போலீசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்'' என்றார். *****












Click it and Unblock the Notifications