கிரிக்கெட் வீரர் சாஹல் விவாகரத்து? மனைவி தனஸ்ரீக்கு ஜீவனாம்சம் தொகை மட்டும் இத்தனை கோடியா? அம்மாடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் சாஹல் - தனஸ்ரீ இடையே விவாகரத்து நடக்க போவதாக செய்திகள் வருகின்றன. இந்த விவாகரத்து செய்திகளுக்கு இடையே.. தனஸ்ரீ சாஹலிடம் இருந்து எவ்வளவு ஜீவனாம்சம் பெறுவார் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

இந்தியாவில் ஜீவனாம்சம் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றல்ல. ஜீவனாம்சம் என்பது தம்பதியரின் தனிப்பட்ட நிதி நிலை மற்றும் நீதிமன்ற விருப்பத்தின் அடிப்படையில் வழக்கிற்கு வழக்கு மாறுபடும். வழக்கில் கணவன் செய்த தவறுகள், மனைவி செய்த தவறுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் ஜீவனாம்சம் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு வழக்கும் தனிப்பட்டது. வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணிகள் காரணமாக ஜீவனாம்சம் தொகை மாறும்.

cricket dhanashree

70 வயது முதிய பெண்ணுக்கு 3 கோடி ரூபாய்க்கு ஜீவனாம்சம் வழங்கிய வழக்குகள் கூட இந்தியாவில் நடந்துள்ளன. நீண்ட கால திருமணங்களில் விவாகரத்து நடக்கும் பட்சத்தில் அதில் அதிக ஜீவனாம்சத்தை வழங்க வேண்டி இருக்கும்.

2020 முதல் சாஹல் மற்றும் தனஸ்ரீயின் திருமண உறவில் உள்ளனர். இதனால் 5 வருடத்திற்கும் குறைவாக அவர்கள் திருமண உறவில் இருப்பதால் இதற்கான ஜீவனாம்சம் குறைவாகவே இருக்கும். இந்த சாஹல் வழக்கில்.. சஹால் தனிப்பட்ட வகையில் மிகப்பெரிய கோடீஸ்வரர். அதேபோல் தனஸ்ரீ தனியாக டான்ஸ் கிளாஸ் நடத்துகிறார்.

இதனால் அவரும் வருமானம் ஈட்டுகிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதன் காரணமாக அலிமோனி அதிகமாக கொடுக்க வேண்டி இருக்காது. ஆனால் சாஹல் கோடீஸ்வரர் என்பதால் அதை அடிப்படையாக வைத்து அலிமோனி கேட்க வாய்ப்பு உள்ளது.

அதிகபட்சம் 20 கோடி ரூபாய் வரை தனரீ அலிமோனி கேட்க வாய்ப்புகள் உள்ளன.. அதாவது மாதம் மாதம் கேட்காமல் ஒரே பேமெண்ட்டாக கேட்க வாய்ப்புகள் உள்ளன. வழக்கு நிலவரத்தை பொறுத்து.. அதாவது வழக்கில் சாஹல் மீது வைக்கப்படும் புகார்கள் அடிப்படையில்.. அல்லது தனஸ்ரீ வைக்கப்படும் புகார்கள் அடிப்படையில் ஜீவனாம்சம் குறைக்கப்படலாம்.. அல்லது உயர்த்தப்படலாம்.

விவாகரத்து:

இந்திய கிரிக்கெட் வீரர் சாஹல் - தனஸ்ரீ விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வருகின்றன. இது தொடர்பாக பல புகார்களும், விவாதங்களும் எழுந்துள்ளன.அதன்படி சாஹல் - தனஸ்ரீ இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்யப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன.

நேற்று சாஹல் வைத்த இன்ஸ்ட்டா ஸ்டோரி ஒன்றில்.. நான் கடினமாக உழைத்தேன். என் கடின உழைப்பு மூலமே நான் இந்த இடத்திற்கு வந்தேன். நான் அப்பா - அம்மாவிற்கு நல்ல மகனாக இருந்தேன். அப்படியே எப்போதும் இருப்பேன் என்பதாக ஒரு போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்ட் விவகாரத்தை முன்னிட்டு செய்த போஸ்ட்டாக கருதப்படுகிறது.

இதில் தனஸ்ரீ மீது சில கடுமையான புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ தனது கணவரை ஒரு மனிதனாக கூட மதிக்கவில்லை. அவரை தூக்கி சுற்றுவது.. நண்பர்கள் முன் அவமதிப்பது போல பேசுவது என்று தனஸ்ரீ மிக மோசமாக நடந்து கொண்டார்.

தனஸ்ரீ சாஹலை பெரிதாக மதிக்கவில்லை. மற்ற கிரிக்கெட் வீரர்கள் போல சாஹல் வசீகரமாக இல்லை என்று தனஸ்ரீ நினைத்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தனஸ்ரீ - ஷ்ரேயாஸ் ஐயர் இடையே நட்பு நெருக்கமாக இருப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. இப்படிப்பட்ட நிலையில்தான் வேறு ஒரு இளைஞரை தனஸ்ரீ டேட்டிங் செய்து வருவதாகவும் புகார்கள் வைக்கப்படுகின்றன. தனஸ்ரீ அவரின் கணவர் சாஹல் உடல் இருந்தது எல்லாம் பணத்திற்காக மட்டுமே என்றும் புகார்கள் வைக்கப்படுகின்றன.

இணையத்தில் வைக்கப்படும் இந்த புகார்களுக்கு இதுவரை தனஸ்ரீ தரப்பில் இருந்து பதிலோ மறுப்போ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+