எடுபடாத ஸ்டேடர்ஜி.. அக்சர் படேலை ஏன் டீமில் சேர்க்கல? இந்திய அணி நிர்வாகத்தை விளாசிய அஸ்வின்!
சென்னை: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நேற்றைய சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி படுதோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில், அணித்தேர்வில் இந்திய அணி நிர்வாகம் சொதப்பியதாக கிரிக்கெட் விமர்சர்கள் விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் வீரர் அஸ்வினும் இதே விஷயத்தை முன்வைத்து இருக்கிறார். அக்சர் படேலுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து காட்டமாக பேசியுள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று தொடங்கிய நிலையில், நேற்று நடைபெற்ற இந்தியா - தென் ஆப்பிரிக்க அணி இடையேயான போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது.

76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்திய அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது தொடர்பாக முன்னாள் வீரர்கள், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள். இந்திய அணி, வீரர்கள் தேர்வில் கோட்டை விட்டதாகவும், முக்கியமான மேட்சில் இந்திய அணியின் யுக்தி எடுபடவில்லை என்று விமர்சித்து வருகிறார்கள்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வினும் அக்சர் படேலை அணியில் எடுக்காமல் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்த்தது ஏன்? என்று காட்டமாக பேசியுள்ளார். தனது யூடியூப் சேனலில் அஸ்வின் இது தொடர்பாக கூறியதாவது:
2024 உலக கோப்பை தொடரில் நடைபெற்ற ஒரு போட்டியில் நெருக்கடியான ஒரு கட்டத்தில் விராட் கோலியுடன் அக்சர் படேல் கை கோர்த்தார். 170-க்கு மேலே போயிட்டாங்க.. தென் ஆப்பிரிக்கா அணி போட்டியை வெற்றி பெற்று இருக்க வேண்டியது. ஆனால், சிறப்பாக நெருக்கடியை கையாண்டு வெற்றியை தேடி தந்தனர்.
அக்சர் படேல் மாதிரி ஒரு பிளேயர் 24 கேரட் கோல்டு இன்வெஸ்ட்மெண்ட் மாதிரி.. ஜடேஜாவோ அக்சேர் படேல் மாதிரி பிளேயர் இருக்கும் போது அவர்களை வெளியில் உக்கார வைப்பது எந்த அளவு சரியான முடிவு என்று தெரியவில்லை. பிரேவிஸ் வந்த ஒரே காரணத்திற்காக வாஷிங்டன் சுந்தர் ஓவரே போடவில்லை.
ஒரு பவுலரை எடுத்துட்டு அந்த பவுலரை யூஸ் பண்ணவே இல்லை என்றால் .. பவுலர் தனது திறமையை வெளிப்படுத்த ஏன் அனுப்புவது இல்லை. அக்சர் படேலுக்கு அணியில் இடம் கொடுக்காதது நியாயமற்றது. அக்சர் படேலை வெளியில் உக்கார வைத்தது துரதிர்ஷ்டவசமானது. யானை தன் தலையில் மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளும் என்று சொல்வார்களே இது அது அந்த மாதிரி சூழ்நிலைதான்" என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications