India vs Pakistan: ஆசிய கோப்பை கிரிக்கெட்.. கோலி, ரோகித் இல்லாமல் சாதித்த இளம்படை.. பாகிஸ்தானை ஓட விட்ட இந்தியா!
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை (India vs Pakistan) வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இல்லாமலே இந்த போட்டி தொடரை இந்திய அணியின் இளம் பட்டாளம் எதிர்கொண்டது. இதில் இந்திய அணி அசத்தல் வெற்றியை ருசித்துள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 பிரிவில் இரு அணிகளும் மல்லு கட்டின.

ஆசிய கோப்பையை வென்ற இந்தியா
இதில், இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. இதன் காரணமாக இன்று நடைபெறும் இறுதிப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இந்தியா, துவக்கமே தடுமாறியது. எனினும், நடு வரிசை வீரர்களின் அசத்தல் ஆட்டத்தால் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு ஆசிய கோப்பையும் வென்றது.
இந்தப்போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கான காரணங்கள் வருமாறு:
* இந்திய அணி பந்து வீச்சில் சிறப்பாகவே விளையாடியது. குறிப்பாக குல்தீப் மாயாஜால சுழலில் பாகிஸ்தானை திணறடித்தார். அதேபோல, பேட்டிங்கிலும் அசத்தியது இந்தியா.
ஷிவம் துபே அதிரடி
* அபிஷேக் ஷர்மா நடப்பு ஆசிய கோப்பை தொடரில் சூப்பர் பார்மில் இருந்தார். கிட்டதட்ட அனைத்து போட்டிகளிலுமே அடித்து நொறுக்கி தள்ளினார்.
* பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா, இன்று தடுமாறினார். ஐந்து ரன்களில் பஹீம் அஷ்ரப் பந்தில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட் 7 ரன்களுக்குள் இந்தியா இழந்தது பெரும் பின்னடைவாக அமைந்துவிட்டது. ஆனாலும் சுதாரித்துக்கொண்ட திலக் வர்மா, ஷிவம் துபே ஆகியோர் அதிரடியாக ஆடி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
ரோகித், விராட் இல்லாமல்
* ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரை எதிர்கொண்டது. சூர்ய குமார் யாதவ் தலைமயிலான இந்திய அணி அனைத்து கணிப்புகளையும் தவிடுபொடுடியாக்கி வெற்றியை பெற்றுள்ளது.
* அதிலும் பாகிஸ்தானை இந்த தொடர் முழுவதும் இந்திய அணி ஓட விட்டுள்ளது. இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற கனவும் பாகிஸ்தானுக்கு கடைசி வரை நிறைவேறாமலே போய்விட்டது.












Click it and Unblock the Notifications