ஆசிய கோப்பைக்கான இந்திய அணி.. 6 கேள்விகள்.. ஷாக் கொடுத்த பிசிசிஐ.. "அவங்களை" எதுக்கு எடுத்தாங்க?
சென்னை: 2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை இன்று பிசிசிஐ அறிவித்தது. டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்து இந்திய அணி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆசிய கோப்பை தொடர் இந்த முறை 50 ஓவர் பார்மெட்டில் நடக்க உள்ளது. 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக நடக்கும் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பயிற்சியாக இருக்கும். முக்கியமாக பாகிஸ்தான் பவுலர்களை எதிர்கொள்ள இந்திய அணிக்கு இந்த தொடர் நல்ல பயிற்சியாக இருக்கும்.

இந்த தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் மாறி மாறி நடக்க உள்ளது. இந்திய அணி ஆடும் போட்டிகள் எல்லாம் இலங்கையில்தான் நடக்க உள்ளது. இந்த நிலையில்தான் 2023 ஆசியக் கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி குழுவை இன்று பிசிசிஐ அறிவித்தது.
அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (விசி), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, மொஹத். ஷமி, முகமது. சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இந்திய அணியில் ஸ்டான்ட் பை வீரராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்திய அணியின் இந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களை கேள்விகளை எழுப்பி உள்ளது.
கேள்வி 1: கே . எல் ராகுல் காயத்தில் இருந்து மீண்டும் வந்துள்ளார். தேசிய அகாடமியில் இருந்து நேரடியாக இவர் இந்திய அணியில் அதுவும் ஆசிய கோப்பையில் ஆடுவது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கேள்வி 2 : ஷ்ரேயாஸ் ஐயர், அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். அவரும் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவரும் நேரடியாக இந்திய அணியில் அதுவும் ஆசிய கோப்பையில் ஆடுவது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
கேள்வி 3: நன்றாக ஆடி வரும் சஞ்சு சாம்சன் ஸ்டான்ட் பை வீரராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரின் ஓடிஐ ஆவரேஜ் இந்த வருடம் 55.7 ஆனால் சூர்ய குமார் யாதவ் அணியில் எடுக்கப்பட்டு உள்ளார். அவரின் ஆவரேஜ் வெறும் 24.3. ஓடிஐ ஆவரேஜில் இந்த அணியில் இரண்டாம் இடத்தில் உள்ள சஞ்சுவிற்கு இடமில்லை. ஆனால் மற்ற வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது.
வீரர்களின் ஆவரேஜ் பின்வருமாறு:
கில்: 69.4
சாம்சன்: 55.7
ஐயர்: 48.5
கிஷன்: 46.3
ராகுல்: 43.6
ரோஹித்: 42.5
கோஹ்லி: 39.0
சூர்யா: 24.3
கேள்வி 4: மும்பை வீரர்கள் சூர்ய குமார், ஸ்ரேயாஸ், ரோஹித் என்று பலருக்கும் மும்பை அகர்கர் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
கேள்வி 5: அணியின் அஸ்வின் இல்லை. ஒருநாள் போட்டிகளில் அவர் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வருகிறார். இந்த முறை சாகல் இல்லை. அக்சர், ஜடேஜா, குல்தீப் உடன் இந்திய அணி செல்கிறது.
கேள்வி 6: பெரிதாக ஆவரேஜ் இல்லாத திலக் வர்மா மும்பை வீரர் என்று அவரே காரணத்திற்காக இந்திய அணியில் எடுக்கப்பட்டு உள்ளாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications