வேம்புலியவே அடிக்கிற அளவுக்கு ஆட்டம் இருக்கலாம்.. ஆனாலும்.. கோலி, ரோகித்துக்கு ஷாக் கொடுத்த பிசிசிஐ!
சென்னை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட விரும்பும் வீரர்கள் கட்டாயம் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெரும்பாலும் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை குறிவைத்து வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசி போட்டியைத் தவிர மற்ற போட்டிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சொதப்பிய நிலையில், பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சிட்னியில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், இருவரும் ஆடிய அசத்தலான இன்னிங்ஸ் இன்னும் ரசிகர்களின் நினைவில் இருக்கின்றன. அப்போட்டியில் ரோஹித்தின் நிதானமான தொடக்கம் மற்றும் கோலியின் ஆட்ட கட்டுப்பாடு இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தது.
அதனால் ரசிகர்கள், இனி கிரிக்கெட் விமர்சகர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி குறித்து இனி பேசாமல் வாயை மூடிவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், தான் பிசிசிஐ வெளியிட்டிருக்கும் புதிய உத்தரவு கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

பிசிசிஐ
ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட விரும்பும் வீரர்கள் கட்டாயம் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு பெரும்பாலும் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை குறிவைத்து வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகார்க்கர்,"சர்வதேச வீரர்கள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட வேண்டும். நீண்ட இடைவெளிக்குப் பிறகும் தங்களை 'மேட்ச் ஃபிட்' நிலையில் வைத்துக் கொள்ள அதுவே சிறந்த வழி. இதை நாங்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்," என்றார்.
அஜித் அகர்க்கர் பேட்டி
மேலும்," உள்நாட்டு கிரிக்கெட் அவர்கள் ஆட வேண்டும் என்று நாம் கூறுவதன் காரணம், சர்வதேசப் போட்டிகளில் அவர்களை தொடர்ந்து சோதிக்க முடியாது. அவர்கள் மூத்த வீரர்கள். ஆனால் அவர்கள் மீண்டும் போட்டி நிலைக்கு திரும்பும் போது, அவர்களை மதிப்பிடவும் நம்பிக்கையுடன் அணியில் சேர்க்கவும் எளிதாக இருக்கும்," எனக் கூறியுள்ளார் அஜித் அகர்க்கர்.
ரோஹித் சர்மா-விராட் கோலி
அவரது இந்த கருத்து, ரோஹித் மற்றும் கோலிக்கு வேறு வழியில்லை என்பதை உறுதி செய்தது. டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் இவ்விரு வீரர்களும், ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆட வேண்டுமானால் உள்நாட்டு கிரிக்கெட் மூலம் தங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று பிசிசிஐ தெளிவாக அறிவித்துள்ளது. இதற்கு இணங்க, ரோஹித் சர்மா மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் நான் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடத் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் விராட் கோலி பங்கேற்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஹசாரே கோப்பை
விஜய் ஹசாரே டிரோபியில் டெல்லி அணி (விராட் கோலி) முதல் ஆட்டத்தில் ஆந்திரா அணியை எதிர்கொள்கிறது. அதேபோல் மும்பை அணி (ரோஹித் சர்மா) சிக்கிம் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. பிசிசிஐயின் இந்த புதிய உத்தரவு, இந்திய கிரிக்கெட்டில் ஒழுங்கு மற்றும் போட்டித் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் வந்தாலும், மூத்த வீரர்களுக்கு இது புதிய சவாலாக மாறியுள்ளது. ரோஹித், கோலி இருவரும் இந்திய கிரிக்கெட்டின் தூண்கள். அவர்களை மரியாதையுடன் கையாள வேண்டும். அதேசமயம், நாட்டுக்காக ஆட வேண்டுமென்றால், உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்களின் பங்களிப்பும் அவசியம் என்கின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications