பேக் டூ பேக் வெற்றி ஓகே! ஆனாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இந்தியா எலிமினேட் ஆகலாம்! எப்படி?
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் இப்போது நடந்து வரும் நிலையில், அதில் இந்திய அணி தனது முதல் இரு போட்டிகளில் கலக்கல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த பேக் டூ பேக் வெற்றியின் மூலம் இந்தியா தனது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது. இருந்தாலும், இந்த ஒரே ஒரு விஷயம் நடந்தால் இந்தியா அணி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற நேரிடும். அது என்ன! அதற்கு எவ்வளவு சதவிகிதம் வாய்ப்பு இருக்கு எனப் பார்க்கலாம்.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் இப்போது சாம்பியன்ஸ் டிராபி உலகக் கோப்பை நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி மிக எளிதாகப் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ஒரே ஒரு சிக்கல்
கிங் கோலி கலக்கல் சதத்தைப் பதிவு செய்த நிலையில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை கிட்டதட்ட உறுதி செய்துள்ளது. அதென்ன கிட்டதட்ட அப்போ இன்னும் கன்பார்ம் ஆகவில்லையா என நீங்கள் கேட்கலாம்.. ஆம், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறிவிட்ட போதிலும் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் உறுதியாகவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் நடந்தால் இந்திய அணி வெளியேற நேரிடும். இது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன பிரச்சினை
இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தையும் நேற்று இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் 2 போட்டியில் இரண்டிலும் வென்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த தொடர் வெற்றிகள் இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டுமே நமக்கும் அரையிறுதிக்கும் இடையே நடுவில் இருக்கிறது.
அதாவது இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோல்வி அடைந்து, மறுபுறம் வங்கதேச அணி நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றால் தான் அந்த சிக்கல் உருவாகும். இதுபோல நடந்தால் இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் 3 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளைப் பெற்றிருக்கும்..
அடுத்து என்னவாகும்
அப்போது குரூப் A பிரிவில் ரன் ரேட் அடிப்படையில் டாப் இரு அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகும். அப்படி நடக்கும் போது நியூசிலாந்தும் வங்கதேசமும் நம்மை விட அதிக ரன் ரேட் வைத்திருந்தால் நாம் தேர்வாகாமல் போகலாம். தற்போதுள்ள சூழலில் வங்கதேசத்தின் ரன்ரேட் சற்று மோசமாகவே இருக்கிறது. இதனால் இது நடக்க வாய்ப்பு குறைவு என்றாலும் முழுமையாக நிராகரித்துவிட முடியாது. மேலும், இன்றைய தினம் நியூசிலாந்தை வங்கதேசம் எதிர்கொள்ளும் நிலையில், அந்த முடிவு வந்தாலே அடுத்து என்ன என்பது தெரிந்துவிடும்.
அடுத்தடுத்த போட்டிகள்
பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. இதனால் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இடையேயான ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் போட்டிகள் துபாயிலேயே நடத்தப்படும். அதன்படி இந்தியா அரையிறுதிக்குத் தேர்வானால் அது மார்ச் 4ம் தேதி துபாயில் நடைபெறும். அதேபோல இறுதிப் போட்டிக்குத் தேர்வாகும் போது அதுவும் மார்ச் 9ம் தேதி துபாயில் நடக்கும். ஒருவேளை இந்திய அணி தேர்வாகவில்லை என்றால் போட்டிகள் பாகிஸ்தானிலேயே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications