சிஎஸ்கே ரசிகர்களுக்கு செய்த சத்தியம்.. சூசகமாக சொன்ன தோனி.. அந்த வார்த்தையை நோட் பண்ணுங்க!
சென்னை: எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லவும் இல்லை.. அதேபோல் அடுத்த சீசனில் கம்பேக் கொடுப்பேன் என்றும் கூறவில்லை என சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இந்த வார்த்தைகளை எப்படி புரிந்து கொள்வது என்று தெரியாமல் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் குழப்பமான மனநிலையில் இருக்கின்றனர்.
சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று பலரும் கணித்து வந்தனர். இதனால் சிஎஸ்கே அணியின் கடைசி போட்டியின் போது ஓய்வு தொடர்பான தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தோனி, எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்லவும் இல்லை.. அதேபோல் அடுத்த சீசனில் கம்பேக் கொடுப்பேன் என்றும் சொல்லவில்லை என்று கூறி இருக்கிறார்.

தோனியின் வார்த்தைகள்
அதேபோல் வெற்றிக்கான பசியுடன் இருக்கிறீர்களா, ஃபிட்னஸ் உடன் இருக்கிறீர்களா, அணிக்கு உங்களால் பங்களிப்பு செய்ய முடிகிறதா என்பதை பார்க்க வேண்டும். எனக்கும் சிஎஸ்கே அணியின் இளம் வீரரான ஆண்ட்ரே சித்தார்த்-க்கும் இடையில் 25 வயது வித்தியாசம் உள்ளது என்றும் கூறியுள்ளார். நன்றாக கவனித்து பார்த்தால், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி மீதான அத்தனை விமர்சனங்களையும் இந்த பேச்சில் அடையாளப்படுத்தி இருக்கிறார்.
விமர்சனங்களுக்கு பதில்
வயது, ஃபிட்னஸ், அணிக்கு அளிக்கும் பங்களிப்பு என்று முக்கிய 3 விஷயங்களை பற்றியும் பேசியுள்ளார். அதேபோல் இத்தனை சீசன்களாக நிச்சயம் விளையாடுவேன் என்று கூறி வந்த தோனி, இந்த சீசனில் என்ன வேண்டுமானாலும் முடிவு எடுப்பேன் என்பதையும் சூசகமாக கூறி இருக்கிறார். ஜாலியாக ராஞ்சியின் சாலைகளில் பைக்கில் ஒரு பயணம் மேற்கொண்டு வீட்டில் நிம்மதியாக ஓய்வு எடுத்து முடிவினை எடுக்கப் போகிறேன் என்று உற்சாகமாக கூறியுள்ளார்.
சென்னை ரசிகர்களுக்கு செய்த சத்தியம்
வழக்கமாக தோனி எப்போதும் ஃபேர்வெல் போட்டிக்காக காத்திருந்ததே கிடையாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென ஓய்வை அறிவித்து விலகிய தோனி, 2019 உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ஓய்வை அறிவித்தார். ஆனால் சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்காக மட்டுமே ஒரு அறிவிப்பை வெளியிட்டார். என்ன நடந்தாலும், என்னுடைய கடைசி போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் மட்டுமே இருக்கும் என்று தோனி அறிவித்திருந்தார்.
கடைசி ஆட்டம்
இதனால் அடுத்த சீசனில் ஒரு போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் மட்டும் விளையாடிவிட்டு தோனி தனது ஓய்வை அறிவித்து வெளியேறுவார் என்று நம்பப்படுகிறது. அதன்பின் சிஎஸ்கே அணியின் சிஇஓ அல்லது ஆலோசகர் பணியில் தோனி அமர்வார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இந்த சீசனிலேயே தோனி இளம் வீரர்களை கொண்டு சரியான ஒரு அணியை கட்டமைத்திருக்கிறார். ருதுராஜ் கெய்க்வாட் வழிநடத்துவதற்கு ஏற்ப அணியை கட்டமைத்து கொடுத்திருப்பதால், மினி ஏலத்தை கணக்கில் கொண்டு தோனியின் முடிவு இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications