"சிஎஸ்கே சரியா ஆடல.. அது உண்மைதான்.." ஆனால் அடுத்த வரியே காசி விஸ்வநாதன் சொன்ன வார்த்தை! இது ஓவர்
சென்னை: இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி அடி மேல் அடி வாங்கி வருகிறது. இப்போது சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலிலும் கடைசி இடத்தில் இருக்கிறது. இதற்கிடையே சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறிய பதில் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல சிஎஸ்கே அணியும் முதல் போட்டியில் பரம எதிரியான மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் சிஎஸ்கே மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ரசிகர்கள் கோபம்
ஆனால், அதன் பிறகு நடந்தவை எல்லாம் சிஎஸ்கே ரசிகர்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியது. சிஎஸ்கே அடி மீது அடி வாங்கி வருகிறது. காயம் காரணமாக கேப்டன் ருதுராஜும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டார். தோனி தான் சிஎஸ்கேவை வழிநடத்துகிறார். ஆனாலும், சீராக வெற்றியைக் குவிக்க முடியாமல் சிஎஸ்கே திணறி வருகிறது.
மொத்தம் 8 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி வெறும் இரு போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதற்கிடையே சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், ஐபிஎஸ் தொடர்பாகவும் சிஎஸ்கே அணியின் பர்பாமென்ஸ் குறித்தும் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். சிஎஸ்கே நன்றாக ஆடவில்லை என்பது உண்மைதான் என சொன்னாலும், அணியில் இருப்பவர்கள் அனைவரும் நல்ல வீரர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
காசி விஸ்வநாதன்
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்னும் 6 போட்டிகள் மீதம் இருக்கிறது. நிச்சயம் சிறப்பாக விளையாடுவோம். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இதற்கு முன்பும் கூட நமக்கு இதுபோல நடந்து இருக்கிறது. தொடர்ந்து போட்டிகளில் தோல்வி அடைந்த பிறகும் கம்பேக் கொடுத்துள்ளோம்.
நல்ல வீரர்களாம்
கடந்த 2010ம் ஆண்டு இதுபோலத் தான் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் நாம் தோல்வி அடைந்தோம். அதன் பிறகு கம்பேக் கொடுத்து ஜெயித்தோம். இந்த டீம் நல்ல டீம். வீரர்கள் எல்லாம் நல்ல வீரர்கள் தான். அவர்கள் தங்களால் முடிந்த பங்களிப்பைத் தருகிறார்கள். நிச்சயம் தங்களை இம்ப்ரூவ் செய்வார்கள். அடுத்த போட்டியில் நன்றாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சரியாக ஆடல
தோல்விக்குக் காரணம் எல்லாம் இல்லை. இது ஒரு விளையாட்டு. ஒரு விளையாட்டில் வெற்றி தோல்வி இரண்டுமே இருக்கும். ஜெயிக்கும்போது அனைவருமே பாராட்டுவார்கள். தோல்வி அடையும் போது சரியாக ஆடவில்லை என்ற விமர்சனங்கள் வரும். இந்த வருடம் இப்படி ஆகிவிட்டது அவ்வளவுதான். நாம் சரியாக ஆடவில்லை என்பது உண்மைதான். ஆனால், இதை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
ருதுராஜ்
தொடர்ந்து ருதுராஜ் குறித்துப் பேசிய அவர், "ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் இந்தாண்டு விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவரது ஆலோசனை அணிக்குத் தேவை என்பதால் அவர் அணியுடனேயே இருக்கிறார். ஜூனியர் வீரர்களுக்கு ஆலோசனை தருவார்" என்றார். ருதுராஜ் மீது சிஎஸ்கே நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், காசி விஸ்வநாதன் பதில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பேசிய காசி விஸ்வநாதன், "நாங்கள் எப்போதும் ஒரு அணியாகவே இருப்போம். வெற்றி தோல்வி சகஜம் தான். தோல்வி அடையும்போது கொஞ்சம் சோகம் இருக்கவே செய்யும். ஆனால், வெற்றி பெற்றால் எல்லாம் சரியாகிவிடும். ஐபிஎல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும் இந்தளவுக்குச் சீராக நல்ல முறையில் விளையாடுவது நம்ம அணி தான். மற்ற டீம்கள் இந்தளவுக்கு ஆடுவதில்லை" என்றார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications