"ஜடேஜா or கெய்க்வாட்.." தோனி ஓகே தான்.. ஆனா சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஷாக்? ஆஹா இதை எதிர்பார்க்கலையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐபிஎல் தொடரில் எந்த அணி எவ்வளவு வீரர்களைத் தக்கவைக்கலாம் என்பது குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் இப்போது பரவி வருகிறது. இதற்கிடையே பயிற்சியாளரும் பிரபல டீம் அனலிஸ்ட்டுமான பிரசன்னா விளக்கியுள்ளார். இதில் அவர் குறிப்பிட்டுள்ள சில விஷயங்கள் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு அதிர்ச்சி தருவதாகவே அமைந்துள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு எந்த வீரர்களைத் தக்கவைக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை வரும் அக். 31ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் சமர்ப்பிக்க வேண்டும்.

ipl csk dhoni

யார் எந்த வீரர்களைத் தக்கவைப்பார்கள் என்பது குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே பிரபல வல்லுநர் பிரசன்னா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

எப்படி இருக்கும்: இது தொடர்பாக அவர் தனது யூடியூப் வீடியோவில், "ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, தூபே ஆகியோரை முறையே ரூ.18, ரூ.14 மற்றும் ரூ.11 கோடிக்குத் தக்கவைக்கப்படுவார்கள். பத்திரானாவை தக்கவைக்கலாமே என்று உங்களுக்குக் கேள்வி வரலாம். ஆனால், பத்திரானா ஏலத்தில் ரூ.18 கோடிக்குப் போவாரா எனத் தெரியாது. ஏனென்றால் பஞ்சாப் தவிர பெரும்பாலான ஐபிஎல் அணிகள் குறைந்தபட்சம் 3 வீரர்களைத் தக்கவைக்கும். அதாவது ரூ.43 கோடி காலி. மீதி ரூ.77 கோடி மட்டுமே இருக்கும். அப்படி இருக்கும் போது பத்திரானா ரூ.18 கோடிக்கு போவாரா எனத் தெரியவில்லை..

எனவே, கெய்க்வாட், ஜடேஜா, தூபே ஆகியோரை தக்கவைப்பார்கள். அன்கேப்ட் பிளேயராக தோனி ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்படுவார். இதன் மூலம் சிஎஸ்கே அணிக்கு ரூ.47 செலவாகும். ஆனால், ஒரு விக்கெட் கீப்பர் (தோனி), ஒரு ஓபனிங் பேட்ஸ்மேன் (கொய்க்வாட்), ஒரு ஸ்பின்னர் + நம்பர் 6ல் ஆடும் பிளேயர் (ஜடேஜா), மேலும் பவர்ஹிட்டர் நம்பர் 4ல் (தூபே) வந்தாச்சு..

பிளான் இதுதான்: 4 வீரர்களை மட்டுமே தக்கவைப்பதால் 2 ஆர்டிஎம்கள் கிடைக்கும். இதன் மூலம் ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களை எளிதாக வாங்கலாம். அப்படி பத்திரானா மற்றும் கான்வேயை ரூ.16 கோடிக்குள் எளிதாக வாங்கிவிடுவார்கள். அதற்கு மேல் போகாது. அதாவது ரூ. 63 கோடிக்கு எல்லா போட்டிகளிலும் விளையாடும் 6 வீரர்கள் கிடைத்துவிடுவார்கள். மீதி 50% தொகை இருக்கும். அதில் ரூ.30 கோடியில் பிளேயிங் 11ல் வரும் 3 இந்தியர்கள் உட்பட 5 வீரர்களை எடுத்துவிடுவார்கள். இப்படிச் செய்தால் சிஎஸ்கே மிக வலிமையாக இருக்கும்" என்றார்.

அப்போது அவரிடம் பத்திரானாவை ஏலத்தில் விடுவார்களா எனத் தெரியவில்லை.. தக்கவைக்கும் போது வீரர்கள் ஒத்துக் கொள்ளும் தொகை தான். அப்படி இருக்கும் போது கெய்க்வாட்டை ரூ.18 கோடிக்கு தக்கவைத்தால்.. அவரை விட சீனியர் வீரரான ஜடேஜா ரூ.14 ஓகே சொல்வாரா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "எப்படிச் செய்தால் சரியாக இருக்கும்: ஜடேஜாவை விட கெய்க்குவாட்டை குறைந்த விலையில் தக்கவைத்தால் சரியாக இருக்குமா என்று கேட்கிறீர்கள்.. இதுபோன்ற ஒரு சூழல் வந்தால் சிஸ்கே நிர்வாகம் என்ன செய்வார்கள் தெரியுமா.. கெய்க்வாட்டிற்கு போன் போட்டு, ஜடேஜாவை ரூ.18 கோடிக்குத் தக்கவைக்கிறோம்.. உங்களை ரூ.14 கோடிக்கு தக்கவைக்கிறோம் என்று சொல்வார்கள். அவரும் எதுவும் சொல்லாமல் ஓகே தான் சொல்லப் போகிறார்.

ஜடேஜாவும் கூட பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் ஒருவர். ரூ. 4 கோடிக்காக எல்லாம் அவர் இதைப் பெரிய விஷயமாக மாற்ற மாட்டார். எனவே, தேவைப்பட்டால் தக்கவைக்கும் தொகையை மாற்றிவிடுவார்கள்.. அவ்வளவே.! ஜடேஜாவாக பார்த்து நான் வேறு டீமிற்கு செல்கிறேன் என்றால் மட்டுமே அவரை தக்கவைக்காமல் விடுவார்கள். ஆனால், அது நடக்க வாய்ப்பு குறைவு என்றே நினைக்கிறேன்.

எனவே, 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டு 2 ஆர்டிஎம் உடன் தான் சென்னை போவார்கள் என்று நினைக்கிறேன். பதிரானா ரூ.18 கோடிக்கு மேல் போகவும் வாய்ப்பு இருக்கு. ஆனால், அந்த ரிஸ்க்கை எடுக்கத் தான் வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான அணிகளிடம் இருக்கும் தொகை குறைவாகவே இருக்கும் என்பதால்.. அந்தளவுக்குப் போக மாட்டார்" என்றார்.

சோகம்: அதேநேரம் இந்த முறை சிஎஸ்கே அணிக்காக ஆடிய பல வீரர்களை நாம் ஏலத்தில் எடுக்க முடியாமல் போகலாம். பல வீரர்கள் உள்ளே வரலாம். இருப்பினும், பழைய வீரர்கள் பலரை இனி சிஎஸ்கே ஜெர்சியில் மீண்டும் பார்ப்பது கடினம் என்றே சொல்லப்படுகிறது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+