சிஎஸ்கே சந்திக்காத சோதனைகளா.. தல தோனியின் கம்பேக் லோடிங்.. தவறுகளை களையும் ருதுராஜ், பிளெமிங்!
சென்னை: ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. இந்த தோல்வியின் காரணமாகவும், நம்பர் 9ல் தோனி களமிறங்கியதாலும் டென்ஷனான சிஎஸ்கே ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். தோனி தொடங்கி சிஎஸ்கே நிர்வாகம் வரை, டிக்கெட் ஸ்கேம், கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை என்று விளாசி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாகவே தோனியின் கடைசி சீசன் என்ற பெயரில் சிஎஸ்கே அணி செய்து வரும் மோசமான ஸ்கேம் ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வரும் போது ஒலிக்கப்படும் பாடல், அவரின் ஷாட்கள் மூலமாக ரசிகர்களை ஏமாற்றி வந்தனர். கடந்த சீசனில் கேப்டன்சி ருதுராஜ் கெய்க்வாட் கைகளுக்கு சென்ற நிலையில், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.

இம்முறை சிஎஸ்கே அணி வெற்றிகரமான சீசனை தொடங்கினாலும், சொந்த மண்ணில் ஆர்சிபி அணியுடன் அடைந்த தோல்வி ரசிகர்கள் விரக்தியடைய வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் இருந்த அனைவரும் தோனி.. தோனி என்று கரகோஷம் எழுப்ப, தோனி அஸ்வினுக்கு பின் பேட்டிங் செய்ய களமிறங்கியது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துவிட்டது.
இதனால் சிஎஸ்கே அணியை ரசிகர்கள் விளாசி தள்ளி வருகின்றனர். ஆனால் தோனியே தவறு செய்தாலும், திரும்ப கேள்வி கேட்கும் ரசிகர்களே உண்மையாக கிரிக்கெட் ரசிகர்கள். நாயக பிம்பத்தை வைத்து சிஎஸ்கே அணி நிர்வாகம் செய்து வந்த ஸ்கேமை, ஒரேயொரு தோல்வி ஒட்டுமொத்தமாக மாற்றி இருக்கிறது. இதனால் சிஎஸ்கே அணி நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் ஐபிஎல் வரலாற்றில் கம்பேக் என்றாலே சிஎஸ்கே அணிதான். சூதாட்ட பிரச்சனையில் சிக்கி 2 ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் புனே அணிக்காக தோனி விளையாடிய போது, 2017 சீசனில் ஸ்டீவ் ஸ்மித்திடம் கேப்டன்சி அளிக்கப்பட்டது. அப்போதும் தோனி ரசிகர்கள் அமைதி காத்தனர். எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து 2018ஆம் ஆண்டு மாஸ் கம்பேக் கொடுத்து கோப்பையை வென்றது.
துபாயில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தோனியால் ஓட முடியாமல் மைதானத்திலேயே முட்டிப் போட்டு ஓய்வு எடுத்தார். அந்த சீசனுடன் தோனியின் சகாப்தம் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்பட்ட போது, அடுத்த சீசனிலேயே கோப்பையை வென்று சாதித்தார். 2022ஆம் ஆண்டு கேப்டன் இல்லாமல் திண்டாடிய போதும், அடுத்த சீசனிலேயே மீண்டும் தோனி சிஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார்.
மெகா ஏலத்திற்கு தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, 43 வயதிலும் தன்னால் விளையாட முடியும் என்று அன்கேப்ட் வீரராக களம் புகுந்துள்ளார். இதனால் தோல்வியடையும் போது ரசிகர்களிடையே எதிர்ப்பு வரும் என்பதை தோனியும் உணர்ந்திருப்பார். இதனால் ரசிகர்களின் கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும் பதில் அளிக்காமல் வெற்றியை பெற்று நிச்சயம் சைலண்ட் செய்வார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications