சிஎஸ்கே சிஇஓ-வாக தோனி.. அடுத்த சீசனில் கம்பேக் கொடுக்க முடியுமா? சரிசெய்ய வேண்டிய பிரச்சனைகள் என்ன?
சென்னை: ஐபிஎல் தொடர் வரலாற்றில் சிஎஸ்கே அணி முதல்முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நிறைவு செய்வது உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி கம்பேக் கொடுப்பதற்கு என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நிறைவு செய்யும் நிலை உருவாகி இருக்கிறது. சிஎஸ்கே வரலாற்றில் இதுவரை ஒருமுறை கூட புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நிறைவு செய்ததில்லை.

பரிதாபம்
இதனால் தோனி ஆடிய கடைசி சீசனில் சிஎஸ்கே அணி இப்படியொரு சாதனையுடன் நிறைவு செய்ய வேண்டுமா என்று ரசிகர்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே நேற்றைய ஆட்டத்திற்கு பின் செய்தியாளர்களை பேசிய பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங், சிஎஸ்கே அணி விளையாடிய விதத்திற்கு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது சரிதான் என்று தெரிவித்துள்ளார்.
தோனியின் ஓய்வு அவசியம்
அதேபோல், அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக சிறந்த திட்டங்களை உருவாக்க தொடங்கிவிட்டோம் என்றும் சூசகமாக கூறியுள்ளார். சிஎஸ்கே அணியின் அடுத்த சீசனை பொறுத்தவரை ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக கேப்டன் தோனி ஓய்வை அறிவித்து, சிஎஸ்கே அணியின் சிஇஓ-வாக அமர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பேட்டிங் வரிசை
சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் இளம் வீரர்களான ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், சிவம் துபே, டிவால்ட் பிரெவிஸ் ஆகியோரை கொண்ட பேட்டிங் வரிசையை உருவாக்க வேண்டும். தோனியின் நம்பர் 7 இடத்தில் ஜடேஜாவையும், அவருக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர்களை போன்ற ஒரு ஃபினிஷரை கொண்டு வர வேண்டும்.
ஃபினிஷர் முக்கியம்
அப்படியில்லை என்றால் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் கிளென் பிலிப்ஸ்-ஐ கொண்டு வருவது சிஎஸ்கே அணிக்கு தரமான முடிவாக அமையும். ஏனென்றால் அனுபவம் வாய்ந்த அவரால், இளம் வீரரையும் கையாள முடியும். பவுலிங்கை பொறுத்தவரை நூர் அஹ்மத், ஜடேஜா, பதிரானா, அன்சுல் கம்போஜ், எல்லீஸ், கலீல் அஹ்மத் ஆகியோரை கொண்டே கட்டமைக்க முடியும்.
யாரை ரிலீஸ் செய்ய வேண்டும்?
இதனால் அஸ்வின், விஜய் சங்கர், ராகுல் திரிப்பாட்டி, தீபக் ஹூடா, சாம் கரண் உள்ளிட்டை விடுவித்து, தேவையான மாற்று வீரர்களை கண்டறிய வேண்டும். இந்த சீசனில் இளம் வீரர்களை கொண்டு வந்ததை போல் மீண்டும் அடுத்த சீசனில் சில தரமான இளம் வீரர்களை கண்டறிவது முக்கியம். இதனால் ஸ்கவுட்டிங் குழுவின் பரிந்துரையை பயிற்சியாளர் ஃபிளமிங் கூடுதல் முக்கியத்துவத்துடன் அணுக வேண்டும்.
கம்பேக் கொடுக்க முடியுமா?
இந்த சீசனில் பிசிசிஐ பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துள்ளது என்றே சொல்லலாம். ஏனென்றால் தார் ரோடு பிட்சாகவும் எங்கும் அமைக்கப்படவில்லை. மொத்தமாக ஸ்பின் டிராக்காகவும் எங்கும் இல்லை. இதனால் எந்த சூழலிலும் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்களை சிஎஸ்கே அணி கண்டறிந்தால் மட்டுமே 6வது கோப்பையை வெல்ல முடியும் என்று பார்க்கப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications