பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகக்கோப்பை மைதானத்தில் ஓடி வந்தாரே.. அவர் யாரு தெரியுமா? பின்னணி இதோ
அகமதாபாத்: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக டி சர்ட் அணிந்து வந்து கைதான நபர் யார்? அவரது பெயர் என்ன? போன்ற விபரங்களை விரிவாக பார்ப்போம்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை இறுதிப் போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி எந்த அளவுக்கு பேசுபொருளானதோ, அதற்கு இணையாக ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்து உள்ளார் ஒரு பாலஸ்தீன் ஆதரவாளர். முதன் இன்னிங்சில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டு இருந்தது. களத்தில் 14 வது ஓவரின்போது விராட் கோலியும் கே.எல்.ராகுலும் பேட்டிங் செய்துகொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு இளைஞர் திடீரென மைதானத்திற்கு உள்ளே நுழைந்தார். பிட்ச் அருகே ஓடிப்போய் விராட் கோலியின் தோள் மீது கைபோட்டு கையணைக்க முயன்றார். அவரது டீ சர்ட்டின் முன் பகுதியில் "பாலஸ்தீன் மீது குண்டு போடாதீர்கள்" என்றும், பின் பக்கத்தில் "பாலஸ்தீனை பாதுகாத்திடுங்கள்" எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. முகத்தில் பாலஸ்தீன் கொடியை கட்டி இருந்தார். கையில் LGBTQவின் வானவில் கொடியும் இருந்தது. இவரது செயலால் சில நிமிடங்கள் போட்டியே நின்றது.
அவரை அங்கு வந்த பாதுகாவலர்களும் போலீசாரும் மைதானத்தை விட்டே அப்புறப்படுத்தினர். மைதானத்திற்குள் நுழைந்ததற்காக அவரை போலீசார் கைது செய்து உள்ளார்கள். சிவப்பு நிற கால் சட்டை அணிந்து முகத்தை மூடிக்கொண்டு நுழைந்த இவர் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்? பெயர் என்ன? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதற்கான விடைகளை பார்ப்போம். அவரை கைது செய்யும் சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது பெயர் ஜான். நான் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன். விராட் கோலியை சந்திப்பதற்காகவே நான் மைதானத்திற்கு உள்ளே சென்றேன். நான் பாலஸ்தீனை ஆதரிக்கிறேன்." என்றார்.
குஜராத் போலீஸ் அந்த இளைஞரை கைது செய்து சந்த்கேதா காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லும்போது எடுத்த வீடியோவில் அவரது முகமும் தெளிவாக பதிவாகி உள்ளது. அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் இளைஞரின் முழு பெயர் வென் ஜான்சன் என்பது தெரியவந்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த அந்த இளைஞர் சீன - பிலிப்பைன் மரபை சேர்ந்தவராவார். ஹமாஸ் உடனான போரில் பாலஸ்தீனின் காசா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதை நிறுத்தக்கோரி இவ்வாறு செய்தததாக தெரிவித்து உள்ளார்.
#WATCH | Gujarat: The man who entered the field during the India vs Australia Final match, brought to the Chandkheda Police Station in Ahmedabad pic.twitter.com/pm9AMyhsSi
— ANI (@ANI) November 19, 2023
அவர் மீது ஐபிசி 447 - அத்துமீறி நுழைதல், ஐபிசி 332 - அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குஜராத் போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, விளையாட்டு போட்டிகளின்போது அரசியல் சார்ந்த போராட்டங்களுக்கு தடை உள்ளது. அதை மீறி இந்த சம்பவம் நடந்து உள்ளது.
இதற்கு முன் ரசிக மனப்பான்மையில் பலர் உள்ளே நுழைந்து இருந்தாலும், ஜான்சன் சர்வதேச பிரச்சனை தொடர்பான டீ சர்ட் அணிந்து உள்ளே நுழைந்தது கூடுதல் கவனத்தை ஈர்த்து உள்ளது. அவர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை.
-
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications