சொந்த ஊர் பாசம்.. ஆயுஷ் பதோனியை தேர்வு செய்ய இதுதான் காரணமா? கம்பீரின் பக்குவமற்ற முடிவு!
மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டெல்லி மாநில கிரிக்கெட் வீரர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகி இருக்கும் சூழலில், அக்சர் படேல் அல்லது ரிங்கு சிங் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, ஆயுஷ் பதோனியை கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்ற சூழலில், 2வது ஒருநாள் போட்டி நாளை ராஜ்கோட் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதனிடையே இந்திய அணியின் 2 வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர்.

ஏற்கனவே ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகிய பின், அவரது இடத்தில் துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டார். முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய வாஷிங்டன் சுந்தர் காயத்தால் விலகிய சூழலில், திடீரென ஆயுஷ் பதோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தரின் இடத்திற்கு ஷாபாஸ் அஹ்மத், நிதீஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங் உள்ளிட்டோர் விளையாட தயாராகி வருகின்றனர்.
அதேபோல் அக்சர் படேல் மிகப்பெரிய அனுபவத்துடன் இருக்கிறார். ஆனால் ஆயுஷ் பதோனி ஏன் சேர்க்கப்பட்டார் என்று ரசிகர்கள் புரியாமல் இருக்கின்றனர். இதனால் கவுதம் கம்பீர் தன்னுடைய ஃபேவரைட் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஏனென்றால் ஆயுஷ் பதோனி தற்போது நடந்து வரும் விஜய் ஹசாரே தொடரிலும் கூட சிறப்பாக ரன்கள் சேர்க்கவில்லை.
டெல்லி அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 16 ரன்கள், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது மாநிலமான டெல்லி அணிக்கு ஆடி வரும் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த ஹர்சித் ராணாவுக்கு அதிக வாய்ப்புகளை கம்பீர் அளித்து வருகிறார்.
இவர் கம்பீர் உடன் கேகேஆர் அணிக்காகவும் விளையாடியவர். அதேபோல் ஆயுஷ் பதோனியும் டெல்லி அணிக்காக விளையாடி வருவதோடு, கம்பீர் ஆலோசகராக இருந்த லக்னோ அணிக்காக விளையாடி வருபவர். இதனால் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் கூட்டணி இந்திய அணியை தங்களின் ஃபேவரைட் வீரர்களை கொண்டு உருவாக்குவதாக குரல்கள் எழுந்துள்ளன.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications