மும்பை அணியின் தொடர் தோல்விக்கு காரணமான அம்பானி.. பாவம் ஹர்திக் பாண்டியா.. விளாசும் பல்தான்ஸ்!
மும்பை: ஐபிஎல் தொடரில் மும்பை அணி அடைந்து வரும் தோல்விகளுக்கு அந்த அணி நிர்வாகமும் முதன்மை காரணமாக மாறியுள்ளது. சரியான பிளேயிங் லெவனை தேர்வு செய்யாததும், சீனியர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்குவதும் அந்த அணியின் தோல்விக்கு 2வது காரணமாக பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய டி காக் 60 பந்துகளில் 112 ரன்களை சேர்த்தார். பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்ர்து 198 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 80 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 35 பந்துகளில் 66 ரன்களையும் விளாசினார். இந்த சீசனில் மும்பை அணி அடையும் 4வது தோல்வி இதுவாகும். இதனால் புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 9வது இடத்தில் நீடிக்கிறது.
இதனால் மும்பை அணியை நினைத்து ரசிகர்கள் கவலை கொள்ள தொடங்கியுள்ளனர். அதேபோல் நேற்றைய ஆட்டம் முழுமையாக முடிவதற்கு முன்பாகவே மைதானத்தில் இருந்து மும்பை ரசிகர்கள் வெளியேற தொடங்கிவிட்டனர். இது மும்பை அணிக்கு அவமானமாக மாறி இருக்கிறது. 5 கோப்பைகளை வென்ற மும்பை அணிக்காக இப்படியான நிலைமை என்று பலரும் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.
மும்பை அணியின் தோல்விக்கு அந்த அணி நிர்வாகமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் ஃபார்மை இழந்து நீண்ட காலங்களாகிவிட்டது. அதேபோல் திலக் வர்மா கடந்த 3 சீசன்களாகவே சொதப்பி வருகிறார். தொடக்க வீரர் ரிக்கல்டனால் 15 பந்துகளுக்கு 40 ரன்கள் அடிக்க முடியாது.
பவுலிங்கில் பொழிவை இழந்த போல்ட், காயத்தில் தொடர்ந்து சிக்கும் சஹர், முழு ஃபிட்னஸ் இல்லாத சஹர், ரன்களை வாரி வழங்கும் ஷர்துல் தாகூர் உள்ளிட்டோரை வைத்து மும்பை அணியால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. ஐபிஎல் தொடரே இளைஞர்களுக்கானதாக மாறிவிட்டதாக பார்க்கப்படும் சூழலில், லெகசி என்ற பெயரில் மும்பை அணி மாட்டிக் கொண்டதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் வான்கடே மைதானத்தில் ஹர்திக் பாண்டியா பவுலிங் செய்யவே தடுமாறி வருகிறார். கேப்டன் என்பதால் பவர் பிளே, மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்களில் பவுலிங் செய்து வருகிறார். இதனை கட்டுப்படுத்த மும்பை அணி வழிவகை செய்ய வேண்டும். அதேபோல் பேட்டிங் ஆர்டரில் ரூதர்போர்டை நம்பர் 4 வரிசைக்கு வந்தால், மும்பை அணி வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications