Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைந்துவிட்டாரா? மும்பை அணி கொடுத்த அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா விளையாடுவாரா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. நேற்றே ஹர்திக் பாண்டியா பயிற்சிக்கு திரும்பிவிட்டதாக கூறிய பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே, மும்பை அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடுகிறது. கடந்த போட்டியில் டெல்லி அணியுடன் மும்பை அணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு ஹர்திக் பாண்டியாவின் காயமும் முக்கிய காரணமாக அமைந்தது. காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா விலகியதால், மும்பை அணியின் பிளேயிங் லெவனில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டது.

Hardik Pandya

இதனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலாவது ஹர்திக் பாண்டியா களமிறங்குவாரா என்ற கேள்வி அந்த அணி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதுதொடர்பாக மும்பை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ஆம்ரே பேசுகையில், ஹர்திக் பாண்டியா இந்தப் போட்டியில் ஆடுவார். நேற்று சுமார் 2 மணி நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.

சில நேரங்களில் வீரர்கள் காயம் அடையும் போது அணியில் மாற்றங்கள் ஏற்படும். அதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மும்பை அணியில் ஏராளமான வீரர்கள் இருக்கிறார்கள். யாருக்கு காயம் அடைந்தாலும் அவர்களின் இடத்தை நிரப்ப வீரர்கள் உள்ளனர். அதேபோல் சில போட்டியில் சூழலை பொறுத்தும் முடிவுகள் எடுக்கப்படும்.

ரோகித் சர்மா சிறப்பாக ஆடுவார் என்று யாருக்கும் சந்தேகம் இருந்திருக்காது என்று நம்புகிறேன். அதேபோல் மும்பை அணிக்காக ரோகித் சர்மா ரன்கள் சேர்ப்பதை ஒருநாளும் போனஸாக பார்க்க மாட்டோம். ரோகித் சர்மாவால் அணிக்கு எந்த மாதிரியான பாசிட்டிவ் விஷயங்களை கொண்டு வர முடியும் என்பதை கவனிக்கிறோம்.

ரோகித் சர்மாவிடம் அவ்வளவு அனுபவம் இருக்கிறது. பவுலர்களிடம் சில ஆலோசனைகளை வழங்க முடியும். சில திட்டங்களை செயல்படுத்த முடியும். ரோகித் சர்மாவை வெறும் பேட்ஸ்மேனாக சுருக்கிட முடியாது. இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா விளையாடி இருக்கிறார். அதில் என்ன மாதிரி ஆடுவார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+