அந்த 30 பந்துகள்! ஆட்டம் தலைகீழாக மாறிய அந்த நொடி! கைவிட்டு போன மேட்சை இந்தியா வென்றது எப்படி
சென்னை: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பை டி 20 இறுதிக்கோப்பை ஆட்டத்தில் திரில் வெற்றிபெற்றுள்ளது. கடைசி 30 பந்துகள் வரை ஆட்டம் தென்னாப்பிரிக்கா கையில்தான் இருந்தது. கடைசி 30 பந்துகளில் 30 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இரண்டு செட்டில் பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக தென்னாபிரிக்கா அணி எளிதாக வென்று இருக்கும்.. ஆனால் இந்திய அணி யோசிக்காத கம்பேக்கை கொடுத்து வெற்றிபெற்றள்ளது.
நேற்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ரோஹித் சர்மா 9 ரன்கள், பண்ட் டக் அவுட் ஆக, கோலி மட்டும் நம்பிக்கை அளித்தார். சூர்யா குமார் யாதவும் 3 ரன்களில் அவுட் ஆக அதன்பின் அக்சர் பட்டேல் அதிரடி காட்டினார். கோலி மெதுவாக ஆடி அரைசதம் அடிக்க, 31 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரி என்று அக்சர் படேல் 47 ரன்கள் எடுத்தார்.

கோலி அதிரடி: அப்படி இருக்க கோலி 50 ரன்களுக்கு பின் வேகம் காட்ட தொடங்கினார். 59 பந்தில் 76 ரன்கள் எடுத்தார். ஆனாலும் அவரின் வேகம் அவ்வளவு சிறப்பாக இல்லை., துபே கடைசியில் 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 176-7 ரன்கள் எடுத்தது. ஆனாலும் இந்திய அணி 15- 20 ரன்கள் குறைவாக எடுத்து இருந்தது.
தென்னாபிரிக்க அணி அதிரடி: இதன்பின் இறங்கிய தென்னாபிரிக்க அணியில் அடுத்தடுத்து ஹென்றிக்ஸ், மார்க்கரம் அவுட் ஆக டி காக், ஸ்டப்ஸ் பார்ட்னர்ஷிப் போட்டு ஆடினர்., ஸ்டப்ஸ் 31, டி காக் 39 ரன்கள் எடுக்க தென்னாப்பிரிக்க அணி ட்ரைவர் சீட்டில் அமர்ந்தது. வெறும் 27 பந்தில் 5 சிக்ஸ் உடன் 52 ரன்கள் கெல்சன் எடுக்க ஆட்டம் அப்படியே தென்னாப்பிரிக்க அணி பக்கம் சென்றது.
கடைசி 30 பந்துகள்: இப்படி கடைசி 30 பந்துகள் வரை ஆட்டம் தென்னாபிரிக்கா கையில்தான் இருந்தது. கடைசி 30 பந்துகளில் 30 ரன்களை எடுக்க வேண்டும், இரண்டு செட்டில் பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக தென்னாபிரிக்கா அணி எளிதாக வெல்லும் என்றே கருதப்பட்டது.
ஆனால் அந்த 30 பந்துகளில் ஆட்டம் தென்னாபிரிக்கா கையை விட்டு சென்றது. முக்கியமாக கடைசி 4 ஓவர்களில்.. அதாவது பாண்டியா - பும்ரா - அர்ஷிதீப் - மீண்டும் பாண்டியா வீசிய ஓவர்கள் ஆட்டத்தை தென்னாபிரிக்கா கையை விட்டு போனது.
1. 15 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா 147-4 ரன்களை எடுத்து இருந்தது. 30 ரன்கள் எடுத்தால் வெற்றி.
2. பும்ரா வீசிய 16வது ஓவரில் 1,2,0,0,1,0, ரன்களை மட்டுமே கொடுத்தார்.
3. அதற்கு அடுத்து பாண்டியா வீசிய ஓவரில்தான் முதல் பந்திலேயே கெல்சன் அவுட் ஆனார். அந்த ஓவரில் W,0,1,1,1,1, ரன்கள் எடுத்து தென்னாபிரிக்கா சரிவை சந்தித்தது.
4. அதற்கு அடுத்த ஓவரிலேயே பும்ரா மீண்டும் வந்து யான்சன் விக்கெட்டையும் எடுத்தார். இந்த ஓவரில் 0,0,1,W,0,1, ரன்கள் சென்றது. இது ஆட்டத்தை மொத்தமாக சிரித்தது.
5. அதன்பின் 19வது ஓவரில் அர்ஷ்தீப் சிங் 0,0,1,2,1,0, ரன்கள் மட்டுமே கொடுத்து கடுமையாக போட்டியை கட்டுப்படுத்தினர், கிரீஸில் மகாராஜாவை வைத்து சிங் ஆட்டத்தை மாற்றினார்.
6. கடைசியாக மீண்டும் வந்த பாண்டியா மில்லர் விக்கெட்டையும் எடுக்க அந்த ஓவரில் 0,4,B1,L1,WD,W,1. ரன்கள் மட்டும் சென்றது.
7. கடைசி 5 ஓவர்களில் 1,2,0,0,1,0,W,0,1,1,1,1,0,0,1,W,0,1,0,0,1,2,1,0,0,4,B1,L1,WD,W,1. ரன்களை மட்டுமே தென்னாபிரிக்கா எடுத்தது. ஒரு சிக்ஸ் கூட, ஒரே ஒரு பவுண்டரி மட்டும் போக, 3 விக்கெட் விழுந்தது ஆட்டத்தை தென்னாபிரிக்கா கையில் இருந்து எடுத்து இந்தியாவிடம் கொடுத்தது.












Click it and Unblock the Notifications