Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திக்கி திணற வைத்த ஷர்த்துல்.. மின்னல் வேகத்தில் பாய்ந்த ஸ்ரீகர்.. அரண்ட ஆஸி.. பின்னணியில் தோனியாமே!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய பவுலர்கள் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. பிட்ச் அதிக புற்களோடு பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது.

How did Shardul Thakur take wicket out Warner in India vs Australia Match of WTC Final 2023?

இதனால் பவுலிங்கிற்கு.. முக்கியமாக பாஸ்ட் பவுலிங்கிற்கு ஆதரவாக பிட்ச் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு உதவாது என்பதால் ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது.

அந்த வீரர் ஜடேஜா. இந்திய அணியில் இந்த முறை அஸ்வின் எடுக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நம்பர் 1 ஸ்பின் பவுலராக இருந்தும் கூட அவர் அணியில் எடுக்கப்படவில்லை. காரணம்.. ஜடேஜாவிடம் பேட்டிங் ஆப்ஷனும் உள்ளது.

இந்திய அணியில் இன்று ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத் (வி.கே), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வாரம்), பாட் கம்மின்ஸ் (கேட்ச்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஆட்டம்: தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டிற்கு 103 ரன்களை இழந்து ஆடி வருகிறது. இன்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே உஸ்மான் குவாஜா சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார். இந்திய அணியின் பவுலிங் இன்று மிகவும் சிறப்பாக உள்ளது.

முதல் செஷன் முழுக்க இந்திய அணி இரண்டு பாஸ்ட் பவுலர்கள்.. சிராஜ் - ஷமி ஆகியோரை மட்டுமே பயன்படுத்தியது. இவர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான பிரஷர் கொடுத்தனர். முதல் செஷன் முடிந்த பின் இந்திய அணி சார்பாக ஷர்த்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் பவுலிங் செய்தனர்.

இதில் முக்கியமாக ஷர்த்துல் தாக்கூர் ஓவர் சிறப்பாக இருந்தது. இவர் ஓவரில் அடிக்கடி வார்னர் திணறினார். அஸ்வினுக்கு பதில் இவரை ஏன் எடுத்தார்கள் என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பவுலிங் செய்தார்.

அதன்படியே ஷர்த்துல் பந்தில் கீப்பர் ஸ்ரீகர் பரத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் வார்னர். இதில் ஸ்ரீகர் பரத் பாய்ந்து வந்து கேட்ச் பிடித்தது பெரிய அளவில் கவனம் பெற்றது. அவரின் கீப்பிங் இன்று சிறப்பாக இருந்தது. ஐபிஎல்லின் போது தோனியிடம் சிறப்பு ஆலோசனைகளை ஸ்ரீகர் பரத் பெற்றார்.

அதில்.. டெஸ்ட் போட்டிகளில் கீப்பரின் செயல் முக்கியம். 90 ஓவர்கள் போடுகிறாரக்ள் என்றால் எல்லா பந்திலும் கீப்பர் கவனமாக இருக்க வேண்டும். அதனால் பின்பக்கம் இருக்கும் போது கூடுதல் கவனத்துடன் இரு என்று தோனி ஆலோசனை வழங்கி உள்ளார். அவர் சொன்னபடியே இன்று மிகவும் கவனமாக இருந்த ஸ்ரீகர் சிறப்பாக கீப்பிங் செய்ததுடன் 2 கேட்சும் பிடித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+